Mpox: கொரோனா போய் அடுத்து வந்த எம்பாக்ஸ்.. ஹெல்த் எமர்ஜென்சியை விட்ட WHO.. பாகிஸ்தான் வரை வந்த தொற்று.. அலறும் இந்தியா!-who declares health emergency over mpox infection and three cases in pakistan and india on high alert - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mpox: கொரோனா போய் அடுத்து வந்த எம்பாக்ஸ்.. ஹெல்த் எமர்ஜென்சியை விட்ட Who.. பாகிஸ்தான் வரை வந்த தொற்று.. அலறும் இந்தியா!

Mpox: கொரோனா போய் அடுத்து வந்த எம்பாக்ஸ்.. ஹெல்த் எமர்ஜென்சியை விட்ட WHO.. பாகிஸ்தான் வரை வந்த தொற்று.. அலறும் இந்தியா!

Marimuthu M HT Tamil
Aug 16, 2024 02:26 PM IST

Mpox: கொரோனா போய் அடுத்து வந்த எம்பாக்ஸ்.. ஹெல்த் எமர்ஜென்சியை விட்ட WHO.. பாகிஸ்தான் வரை வந்த தொற்று.. அலறும் இந்தியா! இந்த எம்பாக்ஸ் வைரஸ் பரவலால் உச்சகட்ட பாதுகாப்பு நிலை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Mpox: கொரோனா போய் அடுத்து வந்த எம்பாக்ஸ்.. ஹெல்த் எமர்ஜென்சியை விட்ட WHO.. பாகிஸ்தான் வரை வந்த தொற்று.. அலறும் இந்தியா!
Mpox: கொரோனா போய் அடுத்து வந்த எம்பாக்ஸ்.. ஹெல்த் எமர்ஜென்சியை விட்ட WHO.. பாகிஸ்தான் வரை வந்த தொற்று.. அலறும் இந்தியா! (AP)

ஆப்பிரிக்காவில் இந்த நோய் அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO) உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தானில் எம்பாக்ஸ் வைரஸ் பாதிப்பு வந்துள்ளது.

குரங்கம்மை குறித்து நமக்குத் தெரிந்தவை:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இருந்து வந்த நோயாளிகளில் ஒருவரிடம் இருந்து பாகிஸ்தானில் எம்பாக்ஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் சுகாதார சேவைகளின் இயக்குநர் ஜெனரல் கருத்துப்படி, இரண்டு நோயாளிகள் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நோயாளியின் மாதிரிகளை உறுதிப்படுத்த இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என்று ராய்ட்டர்ஸ் செய்திமுகமை தகவல் தெரிவித்துள்ளது. மூன்று நோயாளிகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஸ்வீடனிலும் திரிபு எம்பாக்ஸ் வைரஸின் பாதிப்பு பதிவாகியுள்ளது. புதிய திரிபு எம்பாக்ஸ் வைரஸ் பரவி வரும் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் தங்கியிருந்தவர்களுக்கு பாதிப்பினைச் சந்தித்து இருக்கலாம் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

ஜனவரி 2023ஆம் ஆண்டில், தற்போதைய எம்பாக்ஸ் வெடிப்பு தொடங்கியதிலிருந்து காங்கோவில் 27,000 பேர் நோய்ப்பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர் மற்றும் முக்கியமாக குழந்தைகள் மத்தியில் 1,100-க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

எம்பாக்ஸ் மற்றும் அதன் அறிகுறிகள் என்ன?

எம்பாக்ஸ் என்பது ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தின் ஒரு இனமான குரங்கம்மை வைரஸால் ஏற்படும் ஒரு வைரஸ் நோயாகும். 1958ஆம் ஆண்டில் குரங்குகளில் "அம்மை போன்ற" நோய் பரவியபோது, விஞ்ஞானிகளால் இந்த வைரஸ் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. சமீப காலம் வரை, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மக்களில் பெரும்பாலானாருக்கு இந்த வைரஸ் தொற்று காணப்படுகின்றது.

எம்பாக்ஸ் வைரஸானது, பெரியம்மை போன்ற வைரஸ்களின் அதே குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால், லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

Mpox(எம்பாக்ஸ்) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் கைகள், கால்கள், மார்பு, முகம், வாய், பிறப்புறுப்பு பகுதிகளுக்கு அருகில் சொறி ஏற்படுகிறது. சொறி இறுதியில் கொப்புளங்களாக மாறுகிறது.

அதாவது சீழ் நிரப்பப்பட்ட பெரிய வெள்ளை அல்லது மஞ்சள் பருக்களாக காணப்படுகிறது. எம்பாக்ஸ் குணமடைவதற்கு முன்பு ஸ்கேப்களை உருவாக்குகிறது.

மற்ற அறிகுறிகள்:

காய்ச்சல், தலைவலி மற்றும் தசை வலி ஆகியவை எம்பாக்ஸ் வைரஸால் ஏற்படலாம். எம்பாக்ஸ் வைரஸை எதிர்த்துப் போராட முயற்சிக்கும்போது நிணநீர் முனையங்களும் வீக்கமடையக்கூடும். அரிதான சந்தர்ப்பங்களில், எம்பாக்ஸ் வைரஸ் தொற்று ஆபத்தானது.

Mpox எவ்வாறு பரவுகிறது?

நேரடி தோல்-க்கு-தோல் தொடர்பு, உமிழ்நீருடன் தொடர்பு, மேல் சுவாச சுரப்புகள் (ஸ்னோட், சளி), பிறப்புறுப்புகளைச் சுற்றியுள்ள உடல் திரவங்கள் அல்லது புண்கள், நீடித்த நேருக்கு நேர் தொடர்புகள் (பேசுவது அல்லது சுவாசிப்பது போன்றவை), எம்பாக்ஸ் உள்ள ஒருவரால் பயன்படுத்தப்பட்ட பிறகு கிருமி நீக்கம் செய்யப்படாத பொருட்கள், துணிகள் மற்றும் மேற்பரப்புகளுடன் தொடர்பு மூலம் இந்த நோய் பரவுகிறது. எம்பாக்ஸ் கொண்ட கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் கருவுக்கு அல்லது பிறந்த குழந்தைக்கு பிறப்பின்போதும் அதற்குப் பிறகும் வைரஸை அனுப்பலாம்.

முன்னெச்சரிக்கைகள் என்ன?

தடுப்பூசிகள் மூலம் அம்மை நோயைத் தடுக்கலாம். எம்பாக்ஸ் வைரஸ் மற்றும் பெரியம்மை வைரஸ்கள் தொடர்புடையவை என்பதால் (அவை இரண்டும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்கள்), பெரியம்மை தடுப்பூசிகள் எம்போக்ஸுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன.

இந்த எம்பாக்ஸ் வைரஸ் பரவலால் உச்சகட்ட பாதுகாப்பு நிலை எல்லைகளிலும், இந்தியாவின் நுழைவுப் பகுதிகளிலும், விமான நிலையங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.