தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aayirathil Oruvan: எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம்..59 ஆண்டுகளை நிறைவு செய்யும் 'ஆயிரத்தில் ஒருவன்'..!

Aayirathil Oruvan: எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம்..59 ஆண்டுகளை நிறைவு செய்யும் 'ஆயிரத்தில் ஒருவன்'..!

Karthikeyan S HT Tamil
Jul 09, 2024 05:58 AM IST

59 Years of Aayirathil Oruvan: எம்ஜிஆருடன் ஜெயலலிதா ஜோடி சேர்ந்து நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படம்தான், அவரது திரை வாழ்விலும் அரசியல் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் பெற்றுத்தந்தது.

Aayirathil Oruvan: எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம்..59 ஆண்டுகளை நிறைவு செய்யும் 'ஆயிரத்தில் ஒருவன்'..!
Aayirathil Oruvan: எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம்..59 ஆண்டுகளை நிறைவு செய்யும் 'ஆயிரத்தில் ஒருவன்'..!

59 Years of Aayirathil Oruvan: திரையுலகின் புரட்சி நடிகர் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்' வெளியாகி இன்றோடு 59 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் தமிழ் சினிமா இன்றைக்கு அடுத்த கட்டத்துக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். சில படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத படங்களாகவும் அமைந்துவிடுவது உண்டு. மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.