தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rajiv Gandhi Birth Anniversary: ராஜீவ் காந்தி பிறந்தநாள்: சோனியா, கார்கே அஞ்சலி

Rajiv Gandhi Birth Anniversary: ராஜீவ் காந்தி பிறந்தநாள்: சோனியா, கார்கே அஞ்சலி

Karthikeyan S HT Tamil
Aug 20, 2023 11:29 AM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

டெல்லியில் உள்ள வீர் பூமியில் இருக்கும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, லடாக்கில் உள்ள பாங்காங் டிசோ ஏரி அருகே வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தங்கள் சமூக வலை பக்கங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்