தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Air India: 'ஏர் இந்தியாவுக்கு வந்த சோதனை' நட்ட நடுவானில் பெண்ணை தேள் கொட்டியதால் பதற்றம்!

Air India: 'ஏர் இந்தியாவுக்கு வந்த சோதனை' நட்ட நடுவானில் பெண்ணை தேள் கொட்டியதால் பதற்றம்!

Pandeeswari Gurusamy HT Tamil
May 06, 2023 12:25 PM IST

Scorpion Bite:விமானத்திற்குள் எப்படி தேள் வந்தது என்று தெரியவில்லை. அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஏர் இந்தியா விமானம் - கோப்புபடம்
ஏர் இந்தியா விமானம் - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

விமானம் மும்பையில் தரையிறங்கியவுடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடனடியாக சிகிச்சையளித்தனர். சம்பந்தப்பட்ட பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். விமானத்திற்குள் எப்படி தேள் வந்தது என்று தெரியவில்லை. அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் வளைகுடா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த விமானத்தில் பைலட் அறையில் பறவை இருந்தது. விமானம் புறப்படும் முன்பே பைலட் அந்த பறவை பார்த்ததால் வெளியே அனுப்பப்பட்டது. பின் 10 நிமிடம் கழித்து விமானம் புறப்பட்டுச்செல்ல அனுமதிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் கோழிக்கோட்டில் இருந்து துபாய் சென்ற சரக்கு விமானத்தில் பாம்பு மறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான நிறுவனங்கள் பாதுகாப்பு விஷயங்களில் உரிய கவனம் கொள்ள வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்