தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  சொத்துக்குவிப்பு வழக்கு.. அமைச்சர் பொன்முடி மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் அதிரடி!

சொத்துக்குவிப்பு வழக்கு.. அமைச்சர் பொன்முடி மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் அதிரடி!

Karthikeyan S HT Tamil
Nov 06, 2023 12:45 PM IST

TN Minister Ponmudy case: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் இருந்து வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் பொன்முடியையும், அவரது மனைவியையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 397வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகள் சரியா என்பதை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார்.

இதையடுத்து, தனது விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரி அமைச்சர் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், "சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் விடுதலையை எதிர்த்து தானாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு பதிவு செய்தது சரிதான். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்றவர்கள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி . இதுபோன்ற விவகாரத்தை நீதிபதி விசாரணைக்கு எடுத்தது சரிதான். மனுதாரர்கள் தங்களுக்கு உள்ள அனைத்து குறைகளையும் தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வரும்போது தெரிந்துகொள்ளலாம்." எனத் தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்