தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  வடமேற்கு சிரியாவில் நிலநடுக்க பாதிப்பு மீட்பு பணிகள் முடிவு

வடமேற்கு சிரியாவில் நிலநடுக்க பாதிப்பு மீட்பு பணிகள் முடிவு

Priyadarshini R HT Tamil
Feb 14, 2023 01:51 PM IST

Earth Quake Rescue: வடமேற்கு சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி முடிவடையப்போகிறது என்று வெள்ளை ஹெல்மெட் மீட்பு குழு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்திற்கு பின்னர் சேதமடைந்த கட்டிடங்கள். சிரியாவில் உள்ள ஹரெம் நகர். (ராய்டர்ஸ்)
நிலநடுக்கத்திற்கு பின்னர் சேதமடைந்த கட்டிடங்கள். சிரியாவில் உள்ள ஹரெம் நகர். (ராய்டர்ஸ்)

ட்ரெண்டிங் செய்திகள்

நிலநடுக்கம் என்ற பேரழிவுக்குப்பின்னர் 8 நாட்கள் கழித்து, வடமேற்கு சிரியாவில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிருடன் உள்ளவர்களை தேடும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. வெள்ளை ஹெல்மெட் என்ற முக்கிய மீட்பு குழுவினர் இன்று தெரிவித்துள்ளனர். 

“இந்த தேடுதல் பணி முடிவுக்கு வரப்போகிறது. இங்கு இனி யாரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை போன்றதொரு நிலைதான் எங்களுக்கு தெரிகிறது. எனினும் நாங்கள் எல்லா இடங்களிலும் எங்களின் இறுதி சோதனையை செய்ய முயற்சி செய்து வருகிறோம் என்று ராட் அல் சேல் தெரிவித்தார். இவர் இக்குழுவின் தலைவர். வெள்ளை ஹெல்மெட் குழுவினர் இந்த பேரழிவு ஏற்பட்ட பகுதிகளில் முக்கியமான மற்றும் பெரியளவிலான மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

அந்தப்பகுதி அருகில் உள்ள பகுதி மற்றும் கிராமங்களும் என அழிக்கப்பட்ட பகுதி  முழுவதும் மீட்புக்குழுவினர் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்தனர். இந்தக்குழுவின் தற்போதைய இறப்பு எண்ணிக்கை 2,274ஆக உள்ளது. (சுலைமான் அல் காலிதி – செய்தி, ஈத் ஒஸ்மாண்ட் – செய்தி ஆசிரியர்)

முன்னதாக 8 நாட்களுக்கு முன்னர் துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் மிக சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி முழுவதுமே கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.   

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்