தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bds, Mds : பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளுக்கு குறையும் மவுசு! – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

BDS, MDS : பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளுக்கு குறையும் மவுசு! – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Priyadarshini R HT Tamil
Jul 23, 2023 01:07 PM IST

BDS, MDS : இந்த நடவடிக்கை இந்திய பல் மருத்துவ கவுன்சில் மருத்துவத்தின் தரம் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை உயர்த்துவதற்காக எடுத்துள்ளது. 2021-22ம் ஆண்டுகளில் இந்தியாவில் 27,868 பிடிஎஸ் சீட்களும், 6,814 எம்டிஎஸ் சீட்களும் இருந்தன என்று அமைச்சகத்தின் தகவல் தெரிவிக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் பஞ்சாகில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23ம் கல்வியாண்டில் 1,89,420 பிடிஎஸ் சீட்கள் ஒதுக்கப்பட்டது. அதில் 36,585 சீட்கள் காலியாக இருந்தது. 2017-18 முதல் 2022-23 வரை 38,487 எம்டிஎஸ் சீட்கள் உள்ளது. ஆனால் அதில் 5,000 சீட்கள் காலியாக உள்ளது.

சீட்கள் காலியாக இருந்தபோதும், நாட்டின் எதிர்கால மருத்துவ தேவைகளை கருத்தில்கொண்டு, மத்திய அரசு மருத்துவக்கல்லூரிகளை அதிகரித்து வருகிறது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2014 முதல் 2023ம் ஆண்டு வரை பல் மருத்துவத்திற்கான சீட்கள் 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இளநிலை பல் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் ஆகும். முதுநிலை பல் மருத்துவப் படிப்பிற்கான சீட்கள் 48 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 

இந்த நடவடிக்கை இந்திய பல் மருத்துவ கவுன்சில் மருத்துவத்தின் தரம் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை உயர்த்துவதற்காக எடுத்துள்ளது. 2021-22ம் ஆண்டுகளில் இந்தியாவில் 27,868 பிடிஎஸ் சீட்களும், 6,814 எம்டிஎஸ் சீட்களும் இருந்தன என்று அமைச்சகத்தின் தகவல் தெரிவிக்கிறது.

இத்துறையின் வளர்ச்சி வாய்ப்புகளில் உள்ள தொய்வு மற்றும் நல்ல ஊதியம் கிடைக்காததுமே இத்துறையை மாணவர்கள் தேர்ந்தெடுக்காததற்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு காலத்தில் பல் மருத்துவம் பெரியளவில் வளர்ந்த துறையாக இருந்தது. 

தொழில்நுட்ப உட்கட்டமைப்பு குறைபாடுகள் அரசு கல்லூரிகளில் உள்ளது. தனியார் கல்லூரிகளில் மருத்துவமனையுடன் இருப்பதில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதும் இந்த துறையில் ஏற்பட்டுள்ள தொய்வுக்கு காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

தற்போது இந்த துறையில் அரசு வேலை குறைவாக உள்ளது. தனியார் துறையில் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. ஆண்டுக்கே ரூ.1 முதல் ரூ.2 லட்சம் மட்டுமே வருவாய் கிடைக்கிறது. வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டால் இந்த துறை நன்றாக சிறந்து விளங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு சிறு நகரங்களில் இல்லை. மேலும் முதல் 5 இடத்தில் உள்ள கல்லூரிகளும் டெல்லியில் உள்ள அரசு கல்லூரிகள்தான். மற்றவை தனியார் நடத்தும் கல்லூரிகள் மற்றும் அவை ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கட்டணமாக வசூலிக்கின்றன.

எனினும் சுகாதாரத் துறை அமைச்சகம் பல் மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலகளவிலான தரத்துடன் பாடத்திட்டம் உருவாகிக்கொண்டு இருப்பதாகவும், ஆன்லைனில் கற்கும் வசதிகளும் ஏற்படுத்தித்தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்