தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Rbi Announces Launch Of First Pilot For Retail Digital Rupee On 1 Dec

Digital rupee launch: இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் ரூபாய் நாளை அறிமுகம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 30, 2022 10:51 PM IST

நாட்டின் முதல் டிஜிட்டல் ரூபாய் அதிகாரப்பூர்வமாக நாளை அறிமுகம் செய்யப்படுகிறது. முதலில் நான்கு நகரங்களிலும், நான்கு முக்கிய வங்கிகளிலும் இவை அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இந்தியாவில் முதல் முறையாக நாளை டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது
இந்தியாவில் முதல் முறையாக நாளை டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து குறிப்பிட்ட சில பயன்பாட்டின் அடிப்படையில் சோதனை முயற்சியாக டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதையடுத்து டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் நாணயங்களின் மதிப்பில் டிஜிட்டல் ரூபாயு் சில்லறை பண பரிவர்த்தனைக்களுக்காக அறிமுகப்படுத்தப்படும். இந்த டிஜிட்டல் ரூபாய் டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்த டிஜிட்டல் ரூபாய்க்கு c - R என குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போத முதல் கட்டமாக பாரத் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதேபோல் மும்பை, தில்லி, பெங்களூரு, புவனேஷ்வர் ஆகிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் பின்னர் அகமதாபாத், குவாட்டி, இந்தூர், லக்னெள, பாட்னா, ஷிம்லா ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே டிசம்பர் 1 முதல் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 1,2,5 ரூபாய் நாணயங்கள் மதிப்பிலும், ரூ. 10 முதல் ரூ. 2000 வரையிலான பணத்தின் மதிப்பிலும் நடைமுறைக்கு வரவுள்ளது.

டிஜிட்டல் ரூபாய் அல்லது e-Rupee என்றால் என்ன?

இந்த டிஜிட்டல் ரூபாய் என்பது டிஜிட்டல் டோக்கன் போன்றது. இதன் மதிப்பு தற்போது அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் ரூபாய்க்கு உள்ள மதிப்பை கொண்டதாகவே உள்ளது.

எப்படி டிஜிட்டல் ரூபாய் வேலை செய்யும்?

இந்த டிஜிட்டல் ரூபாய் என்பது வங்கிகள் மூலம் வாடிகையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பயன்படும். இதை டிஜிட்டல் வாலட் மூலம் எலெக்ட்ரானிக் கருவிகளில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். e-Rupee அல்லது QR கோட் மூலம் ஆன்லைன் பரிமாற்றம் செய்யலாம். இந்த டிஜிட்டல் ரூபாயை வங்கிகளில் டெபாசிட் செய்வது மூலம் பணமாக மாற்றி கொள்ள முடியும்.

IPL_Entry_Point