Rajiv Gandhi death anniversary: ’இந்திராவின் மகன் முதல் இந்தியாவின் பிரதமர் வரை!’ ராஜீவ் காந்தியின் நினைவலைகள்!
”Rajiv Gandhi death anniversary: இந்திராவின் மகனாக பிறந்து இந்தியாவின் பிரதமராக இருந்தது வரையிலான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவலைகள்”

"வாக்களிக்கும் வயதைக் குறைத்தல், பஞ்சாயத்து ராஜ் , தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை வலுப்படுத்துதல், அண்டை நாடுகள் உடனான உடன்படிக்கைகள் உள்ளிட்டவைகளுக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இன்றளவும் நினைவுக்கூறப்படுகிறார்.
ராஜீவ் காந்தியின் பிறப்பும் படிப்பும்!
ராஜீவ் காந்தி ஆகஸ்ட் 20, 1944 அன்று பம்பாயில் பிறந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அவருக்கு வெறும் மூன்று வயது இருந்த காலத்தில் அவரது தாத்தா ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமரானார்.
டெஹ்ரா டன்னில் உள்ள வெல்ஹாம் ப்ரெப்பில் பள்ளிக்குச் சென்றார். அதற்கு பின்னர் இமயமலை அடிவாரத்தில் உள்ள டூன் பள்ளிக்குச் சென்றார். பின்னர் காந்தி கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரிக்குச் சென்றார், ஆனால் விரைவில் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரிக்கு மாறி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பு படித்தார்.
