தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Miss India 2023: ‘மிஸ் இந்தியா 2023’ பட்டத்தை வென்றார் நந்தினி குப்தா!- யார் இந்த பேரழகி?

Miss India 2023: ‘மிஸ் இந்தியா 2023’ பட்டத்தை வென்றார் நந்தினி குப்தா!- யார் இந்த பேரழகி?

Karthikeyan S HT Tamil
Apr 16, 2023 12:04 PM IST

Nandini Gupta Wins Miss India 2023: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நந்தினி குப்தா 'மிஸ் இந்தியா 2023' பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

‘மிஸ் இந்தியா 2023’ பட்டம் வென்றார் நந்தினி குப்தா.
‘மிஸ் இந்தியா 2023’ பட்டம் வென்றார் நந்தினி குப்தா.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் ஒய்யார நடைபோட்டபடி அழகு பதும்ப கலந்துகொண்டனர். இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 19 வயதேயான நந்தினி குப்தா என்பவர் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 'மிஸ் இந்தியா 2023' பட்டத்தை அவர் வென்று அசத்தி இருக்கிறார்.

டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா இரண்டாம் இடமும், மணிப்பூரின் தோனோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் மூன்றாம் இடமும் பிடித்தனர். அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள உலக அழகிக்கான போட்டியில் நந்தினி, இந்தியா சார்பில் பங்கேற்பார். அதற்கு தகுதியை அவர் இப்போது பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியை சேர்ந்தவர் நந்தினி குப்தா. லாலா லாஜ்பத் ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை படித்து வருகிறார். தனது அழகு மற்றும் ஆளுமையின் மூலம் 'மிஸ் இந்தியா 2023' பட்டத்தை அவர் வென்றுள்ளார். வாழ்வில் எழுகின்ற சவாலை கற்றலுக்கான வாய்ப்புகளாக கருதி தான் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நந்தினி தெரிவித்துள்ளார்.

மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி, ரத்தன் டாடா தனது இன்ஸ்பிரேஷன் என்றும் பெருமையாக தெரிவித்துள்ளார். "ரத்தன் டாடா மனிதகுலத்திற்காக அனைத்தும் செய்கிறார். தனது பெரும்பாலான சொத்துகளை நன்கொடையாக வழங்கி உள்ளார். மில்லியன் கணக்கான மக்களால் நேசிக்கப்படுபவர்" என ரத்தன் டாடா குறித்து நந்தினி பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.

“உலகமே இதோ அவர் வருகிறார். வசீகரத்தாலும், அழகினாலும் எங்களை ஈர்த்து நெஞ்சங்களை வென்றார். அவரை உலக அழகி பட்டத்திற்கான மேடையில் பார்க்க ஆவலுடன் காத்துள்ளோம். நந்தினி குப்தா, உங்களது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது” என மிஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்