தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ரிக்ஷா ஓட்டுநருக்கு அடித்த லாட்டரி- 2.5 கோடியில் என்ன செய்ய போகிறார்!

ரிக்ஷா ஓட்டுநருக்கு அடித்த லாட்டரி- 2.5 கோடியில் என்ன செய்ய போகிறார்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 23, 2023 12:54 PM IST

கடந்த சில ஆண்டுகளாக லாட்டரிகள் வாங்காமல் இருந்த நிலையில் தற்போது லாட்டரி டிக்கெட் வாங்கியதில் பரிசு கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் ரிக்ஷா ஓட்டுநர்

 ரிக்ஷா ஓட்டுநர்
ரிக்ஷா ஓட்டுநர்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் இவர் பல ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வருகிறார். இறுதியாக தற்போது அவருக்கு லாட்டரியில் இரண்டரை கோடி கிடைத்துள்ளது. இது பைசாகி மாநில அரசின் திருநாள் பரிசு. ஆனால் இரண்டரை கோடி ரூபாய் வென்ற பிறகும் அவருக்கு பெரிய கனவோ திட்டங்களோ இல்லை.வாழ்நாள் முழுவதும் மிக சிறிய வீட்டில் இருந்ததால் வீடு மட்டுமே அவரது கனவாக உள்ளது.

தனக்கு லாட்டரி கிடைத்தது குறித்து அவர் கூறியதாவது, நான் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்குவேன். குலுக்கல் முடிந்த பின் அதை கிழித்து எரிந்து விடுவேன். ஆனால் நான் ஜெயித்தேனா இல்லையா என்பது குறித்தெல்லாம் கவலை பட்டதில்லை. இதுகுறித்து ஏஜெண்டுகளிடமும் இதுவரை கேட்டதில்லை . நான் ரெம்ப சந்தோசமா இருக்கேன். அதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. நான் 40, 50 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வருகிறேன்.

நாங்க கிராமத்தில் தான் வாழ்கிறோம். ஆனால் நகருக்கு போகும் போதெல்லாம் லாட்டரி சீட்டுகள் வாங்குவேன். ஒரு முறை கூட பரிசு ஜெயிச்சதில்லை . அதனால் லாட்டரி சீட்டுகள் வாங்குவதை கடந்த 2 , 3 ஆண்டுகளாக நிறுத்தி விட்டேன். இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்னால் ஊருக்கு போனேன் கடைசியாக ஒரு முறை வாங்கிப்பார்க்கலாம் என்று வாங்கினோன். ஆனால் நல்வாய்ப்பாக இந்த முறை நான் ஜெயிச்சுட்டேன். என்கிறார். எனக்கு 4 பசங்களும் பேர குழந்தைகளும் இருக்காங்க. 

அவங்களுக்கு வீடு கட்டி கொடுக்க ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் 2 அறைகள் கொண்ட வீடு கட்டணும். என் வாழ்நாள் முழுவதும் செங்கல்களால் ஆன வீட்டிற்காக நான் ரெம்ப கஷ்டப்பட்டேன். நான் கூலி தொழிலாளியாக இருந்தேன். பின் சில வீட்டுகளில் உதவியாளராக இருந்தேன். பின் விவசாயம். சில காலத்திற்கு முன் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பணி செய்தேன் ஆனால் லாபம் இல்லை.

இதனால் கடந்த 25 ஆண்டுகளாக ரிக்ஷா இழுக்கிறேன். ரிக்ஷா என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிடுச்சு. லாட்டரி ஜெயிச்சதால பணம் கிடைக்கும் என தெரியும் ஆனால் என் வேலையை விரும்புறேன். எனக்கு மரம் நடுவது பிடிக்கும். கோடைக்காலத்தில் வேலை செய்வது கஷ்டம். அதனால் குளிர் காலத்தில் மரம் நடுவதை இரண்டு அல்லது 3 மணி நேரம் செய்வேன்.

இதுகுறித்து குர்தேவ் சிங்கின் மனைவி கூறியதாவது, என்மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்ல முடியாது வாழ்நாள் முழுவதும் வறுமையில் இருந்தோம். நாங்கள் ஏழைகள் என்பதில் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. அன்று ஞாயிறு என்பதால் என் கணவர் வீட்டில் இல்லை. லாட்டரி ஏஜெண்டுகள் வந்த போது இரண்டரை கோடி வென்றதாக கூறினார். அவர் கடுமையாக உழைத்ததின் பலன் இது என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் லாட்டரி டிக்கெட் வாங்குவீர்களா என்ற கேள்விக்கு ஏற்கனவே ஜெயிச்சத வச்சு சந்தோஷபடுறேன். என் வாழ்வின் கடைசி கட்டத்தில் உள்ளேன். எதிர்காலம் குறித்தும் கடவுள் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று யாருக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்