தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Suprem Court: 'மகனுக்கு தேர்வு உள்ளது'! Tranferஐ மறுபரீசிலனை செய்ய கோரிய நீதிபதி - உச்ச நீதிமன்றம் கொலீஜியம் மறுப்பு

Suprem Court: 'மகனுக்கு தேர்வு உள்ளது'! Tranferஐ மறுபரீசிலனை செய்ய கோரிய நீதிபதி - உச்ச நீதிமன்றம் கொலீஜியம் மறுப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 11, 2023 11:34 AM IST

மகனுக்கு ஆண்டு தேர்வு இருப்பதை கருத்தில் கொண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய கோரிய பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி மதுரேஷ் பிரசாத் கோரிக்கையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்தது.

மகன் தேர்வை காரணம் காட்டி இடமாற்றத்தை மறுபரீசிலனை செய்ய  கோரிய பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி மதுரேஷ் பிரசாத்
மகன் தேர்வை காரணம் காட்டி இடமாற்றத்தை மறுபரீசிலனை செய்ய கோரிய பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி மதுரேஷ் பிரசாத்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கு, நீதிபதியின் கோரிக்கை எந்த விதத்திலும் தகுதியுடையதாக இல்லை எனக் கூறி கொலீஜியம் முடிவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மகனின் தேர்வை காரணம் காட்டி மறுபரிசீலனை கோரிக்கை வைப்பதற்கு முன்னரே, இடமாற்றத்துக்கு அவர் ஒப்புக்கொண்டையும் கொலீஜியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் கொலீஜியம் சார்பில் வெளியிடப்பட்ட கடிதத்தில், "நீதியரசர் மதுரேஷ் பிரசாத், கொல்கத்தாவில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு தன்னை மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதலை தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் இறுதி முடிவை எடுக்கும்போது, தனது இளைய மகனின் இறுதி தேர்வு பிப்ரவரி 2024இல் நடைபெற உள்ளது என்பதை கொலீஜியம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

நீதிபதி மதுரேஷ் பிரசாத் விடுத்த கோரிக்கையை நாங்கள் பரிசீலித்தோம். அவர் விடுத்த கோரிக்கையில் எந்த தகுதியும் இல்லை என கொலீஜியம் முடிவு செய்துள்ளது. எனவே, அவர் கொல்கத்தாவில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான, பரிந்துரையை மீண்டும் வலியுறுத்த தீர்மானித்துள்ளது."

அத்துடன், "சிறந்த நீதி நிர்வாகத்திற்காகவே இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்" குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்