தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Musharraf Passed Away: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்!

Musharraf Passed Away: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 05, 2023 12:19 PM IST

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்(79) துபாயில் இன்று காலமானார்.

முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்
முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்

ட்ரெண்டிங் செய்திகள்

நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு 1943 ஆம் ஆண்டு டெல்லியில் பர்வேஸ் முஷாரப் பிறந்தார். நாடு விடுதலை பெற்ற பின்னர் முஷாரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தனர்.

முஷாரப் 1964 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக முன்னேறு பாகிஸ்தான் ராணுவத்தில் தளபதியாகப் பொறுப்பேற்றார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் ஆட்சி 1999 ஆம் ஆண்டு கவிழ்ந்தது.

பின்னர் அந்த நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக முஷாரப் பாகிஸ்தானின் அதிபரானார். 2001 ஆம் ஆண்டு இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தைகளை நடத்தினார்.

2008 ஆம் ஆண்டு தனது பிரதமர் பதவியிலிருந்து விலகினார். பின்னர் பாகிஸ்தானை விட்டு முஷாரப் துபாய்க்குச் சென்றார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முஷாரப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

IPL_Entry_Point

டாபிக்ஸ்