தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Odisha Train Accident: ரயில் விபத்து நடந்ததும் லைவ் லொகேஷன் அனுப்பி அலர்ட் செய்த Ndrf வீரர்!

Odisha Train Accident: ரயில் விபத்து நடந்ததும் லைவ் லொகேஷன் அனுப்பி அலர்ட் செய்த NDRF வீரர்!

Manigandan K T HT Tamil
Jun 04, 2023 11:22 AM IST

Train Accident: ரயில் விபத்து நடந்தவுடன் மொபையில் லைவ் லொகேஷனை அனுப்பி எச்சரிக்கை செய்திருக்கிறார் தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்.

ரயில் விபத்து நடந்த இடம்
ரயில் விபத்து நடந்த இடம் (via REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், ரயில் விபத்து நடந்தவுடன் மொபையில் லைவ் லொகேஷனை அனுப்பி எச்சரிக்கை செய்திருக்கிறார் தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்.

இந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை தவறான பாதையில் நுழைந்து நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியது. அதன் பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் சிதறிக்கிடந்தன, மற்றொரு பயணிகள் ரயிலான பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் அதிவேகத்தில் வந்து அந்தப் பெட்டிகள் மீது மோதி தடம் புரண்டது.

இதனால் ஏற்பட்ட பெரிய விபத்தில் பலி எண்ணிக்கை 280-ஐ கடந்துள்ளது. இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இரு கருதப்படுகிறது.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்)வீரர் வெங்கடேஷ் விடுமுறையில் இருக்கிறார். இவர் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து தமிழகத்திற்கு பயணம் செய்தார். அவரது கோச் பி-7, தடம் புரண்ட போதிலும், அதற்கு முன்னால் உள்ள கோச்கள் மீது மோதவில்லை.

அவர் தேர்டு ஏசியில் பயணம் செய்தார். இருக்கை எண் 58.

கொல்கத்தாவில் NDRF இன் 2 வது பட்டாலியனில் பணியமர்த்தப்பட்டிருக்கும் 39 வயதான வெங்கடேஷ், விபத்து நடந்ததும் முதலில் பட்டாலியனில் உள்ள தனது மூத்த இன்ஸ்பெக்டரை அழைத்து விபத்து குறித்து தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் சில புகைப்படங்கள் மற்றும் விபத்து நடந்த இடத்தின் லைவ் லோக்கேஷனை வாட்ஸ்அப்பில் NDRF கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினார்.

மேலும் இந்த லைவ் லொகேஷனைப் பயன்படுத்தி முதல்கட்ட மீட்புக் குழுவினர் அந்த இடத்தை அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

"நான் ஒரு பெரிய அதிர்வை உணர்ந்தேன். அதன்பிறகு என் கோச்சில் இருந்த சில பயணிகள் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டேன். முதல் பயணியை வெளியே கொண்டு வந்து ரயில் பாதைக்கு அருகில் உள்ள ஒரு கடையில் அமரவைத்தேன். பிறகு மற்றவர்களுக்கு உதவ விரைந்தேன். ஒரு மெடிக்கல் ஷாப் உரிமையாளர் உட்பட உள்ளூர்வாசிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தனர்" என்று அவர் கூறினார்.

விபத்து நேரிட்ட 2 ரயில்களிலும் சுமார் 2,300 பயணிகள் இருந்தனர். இரவு நேரத்தில் விபத்து நடந்ததால், உள்ளூர் மக்கள் ஸ்மார்ட்போனில் இருந்த டார்ச் லைட்டுகளை பயன்படுத்தி மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்