தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Irctc: புதிய வசதி..ரயில் பயணத்தில் Whatsapp மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்! எப்படி?

IRCTC: புதிய வசதி..ரயில் பயணத்தில் WhatsApp மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்! எப்படி?

Manigandan K T HT Tamil
Feb 07, 2023 12:15 PM IST

WhatsApp: ரயிலில் பயணிக்கும்போது உணவு ஆர்டர் செய்வதற்கு இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதி சில குறிப்பிட்ட ரயில்களுக்கு மட்டுமே இப்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது. படிப்படியாக அனைத்து ரயில்களுக்கும் இந்த வசதி விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் லிமிடெட் (irctc) ரயில் பயணத்தின்போது பயணிகள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தியும் உணவு ஆர்டர் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

ஐஆர்சிடிசி ஏற்கனவே அதன் இணையதளமான www.catering.irctc.co.in மற்றும் இ-கேட்டரிங் செயலியான Food on Track மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது.

இந்நிலையில், வாட்ஸ்ஆப்பிலும் உணவை ஆர்டர் செய்யும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நோக்கத்திற்காக ரயில்வே வணிக வாட்ஸ்ஆப் எண்ணை +91-8750001323 தொடங்கியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்கள் மற்றும் பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகளுக்காக வாட்ஸ்அப் தொடர்பு செயல்படுத்தப்படவுள்ளது. வாடிக்கையாளர்களின் கருத்து மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், ரயில்வே நிர்வாகம் மற்ற ரயில்களிலும் இந்த வசதியை அடுத்தடுத்த கட்டமாக செயல்படுத்தும்.

ரயில்வே தனது செய்திக்குறிப்பில், பயணிகள் பயணம் செய்யும் போது வாட்ஸ்அப் மூலம் உணவை எவ்வாறு ஆர்டர் செய்யலாம் என்பது குறித்த செயல்முறையை விளக்கியுள்ளது.

1. டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, ​​www.ecatering.irctc.co.in என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இ-கேட்டரிங் சேவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வணிக வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வாடிக்கையாளருக்கு ஒரு செய்தி அனுப்பப்படும்.

2. வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் இருந்து நேரடியாக ரயில் நிலையங்களில் உள்ள தங்களுக்கு விருப்பமான உணவகங்களில் இருந்து உணவை முன்பதிவு செய்யலாம்.

3. இதற்குப் பிறகு, வாட்ஸ்அப் எண் இரு வழி தொடர்பு தளமாக இயக்கப்படும். AI பவர் சாட்போட் பயணிகளுக்கான இ-கேட்டரிங் சேவைகளின் அனைத்து வினவல்களையும் கையாளும்.

ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 50,000 உணவுகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, ரயிலில் பயணிகளுக்கு உணவை வழங்குவதற்காக ஆன்லைன் தளமான Zoop India வாட்ஸ்அப் சாட்பாட் தீர்வுகள் வழங்குநரான ஜியோ ஹாப்டிக் டெக்னாலஜிஸ் லிமிடெட் உடன் ரயில்வே நிர்வாகம் பார்ட்னர்ஷிப் செய்து கொண்டது.

பயணிகள் தங்கள் PNR எண்கள் மூலம் வாட்ஸ்ஆப் அடிப்படையிலான சுய சேவை உணவு விநியோக தளத்தைப் பயன்படுத்தி உணவு ஆர்டரை செய்யலாம். நிகழ்நேர ஆர்டர் கண்காணிப்பும் பயணிகள் செய்ய முடியும். தங்கள் இருக்கைக்கே நேராக உணவு டெலிவரி செய்யப்படும் என்று ஐஆர்சிடிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்