தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Iran: ’ஈரானுக்கு செல்ல இனி விசா தேவையில்லை!’ விசா இன்றி இந்தியர்கள் செல்லும் நாடுகள் விவரம் இதோ!

Iran: ’ஈரானுக்கு செல்ல இனி விசா தேவையில்லை!’ விசா இன்றி இந்தியர்கள் செல்லும் நாடுகள் விவரம் இதோ!

Kathiravan V HT Tamil
Dec 16, 2023 12:29 PM IST

”இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து ஈரானும் இந்தியர்களுக்கு விசா இன்றி பயணிப்பதற்கான சலுகையை அறிவித்துள்ளது”

ஈரான்
ஈரான்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த மாத தொடக்கத்தில், தாய்லாந்து அரசாங்கம் நவம்பர் 10, 2023 முதல் மே 10, 2024 வரை இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தாய்லாந்திற்குள் வர சுற்றுலா விசா தேவையில்லை என்று அறிவித்து இந்திய சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்தது. தாய்லாந்து அதிகாரிகள் சுற்றுலா நோக்கங்களுக்காக 30 நாட்கள் தங்குவதற்கு தற்காலிக விசா விலக்கு அளித்தனர். 

மார்ச் 31, 2024 வரை இந்தியப் பயணிகளுக்கு 30 நாட்கள் தங்குவதற்கு இலங்கையும் இதே சலுகையை அறிவித்தது. 

இந்த நிலையில் இந்தியா உட்பட 33 நாடுகளுக்கான விசா தேவைகளை ஈரான் அரசு தள்ளுபடி செய்துள்ளது . கடந்த மாதம், டிசம்பர் 1, 2023 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் வந்து 30 நாட்கள் தங்க மலேசிய அரசு அனுமதி அளித்தது.  

தாய்லாந்து, மலேசியா, கென்யா , ஈரான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை தவிர உலகெங்கிலும் உள்ள 20 நாடுகளுக்கு மேல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கி உள்ளது.  

  • குக் தீவுகள்
  • பிஜி
  • மைக்ரோனேசியா
  • நியு
  • வனுவாடு
  • ஓமன்
  • கத்தார்
  • பார்படாஸ்
  • பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்
  • டொமினிகா
  • கிரெனடா
  • ஹைட்டி
  • ஜமைக்கா
  • மாண்ட்செராட்
  • செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
  • செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
  • டிரினிடாட் மற்றும் டொபாகோ
  • பூட்டான்
  • கஜகஸ்தான்
  • ஹாங்காங்
  • நேபாளம்
  • எல் சல்வடோர்
  • மொரீஷியஸ்
  • செனகல்
  • துனிசியா
  • மக்காவோ (SAR சீனா)
  • காபோன்
  • மடகாஸ்கர்
  • ருவாண்டா

இதற்கிடையில், வேறு சில நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா-ஆன்-அரைவல் விருப்பங்களை வழங்குகின்றன. அவை சீஷெல்ஸ், மாலத்தீவுகள், இந்தோனேசியா, சமோவா, தான்சானியா, மார்ஷல் தீவுகள், பலாவ் தீவுகள், துவாலு, ஈரான், ஜோர்டான், செயின்ட் லூசியா, கம்போடியா, லாவோஸ், மியான்மர், திமோர்-லெஸ்டே, பொலிவியா, புருண்டி, கேப் வெர்டே தீவுகள், கொமோரோ தீவுகள், டிஜிப் தீவுகள், , கினியா-பிசாவ், மொரிட்டானியா, மொசாம்பிக், சியரா லியோன், சோமாலியா, டோகோ மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் வீசா - ஆன் - அரைவல் சலுகையை வழங்கி வருகிறது. 

IPL_Entry_Point