தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bengaluru : ’உடலுறவுக்கு நோ சொல்லி கொடுமைபடுத்துகிறார்’ கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. போலீசில் பெண் புகார்!

Bengaluru : ’உடலுறவுக்கு நோ சொல்லி கொடுமைபடுத்துகிறார்’ கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. போலீசில் பெண் புகார்!

Divya Sekar HT Tamil
Jun 10, 2023 08:20 AM IST

பெங்களூருவைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் ஒரு வருடமாக தன்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட மறுத்த கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கணவர் மீது போலீசில் பெண் புகார்
கணவர் மீது போலீசில் பெண் புகார் (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

இருவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர். திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே அன்பும், புரிதலும் பெரிதளவில் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் இவர்களது இல்லற வாழ்வு கசப்பாக மாறியது. இளம்பெண் தன் கணவரிடம் நெருங்கிச் செல்ல நினைத்தும் அவர் எந்தவித ஆர்வமும் காண்பிக்கவில்லை என தெரிகிறது. கணவர் சுமார் ஒரு வருடமாக தாம்பத்திய உறவை மறுத்து வந்ததால் பொறுமை இழந்த இளம்பெண் பரஸ்பர விவகாரத்து செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கும் அந்த கணவர் உடன்படவில்லை என தெரிகிறது.

இதனால், இளம்பெண் இது தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹார காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "எனது திருமண வாழ்க்கை சீரழிந்துவிட்டது. எனக்கும் எனது கணவருக்கும் இடையே புரிதல் இல்லை. இது தொடர்பாக நான் பலமுறை அவரிடம் பேசினேன். ஆனாலும் இல்லற வாழ்வு குறித்து கவலை கொள்ளாமல், அற்ப விஷயங்களுக்காகவே கோபப்படுவார். அவர் என் மீது செலுத்தும் அன்பும் மேலோட்டமானதாகவே தோன்றுகிறது.

ஒரு வருமாக தாம்பத்திய வாழ்வை மறுத்து என்னை கொடுமைப்படுத்தினார். எனது திருமண வாழ்க்கை குறித்த கனவுகளை என் கணவர் ஏற்கனவே சிதைத்துவிட்டார். அவர் மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டவராக இருக்கிறார். அதனால், பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று கூறி நான் ஆவணங்களைக் கொடுத்தபோதும், அதில் கையெழுத்து போட மறுத்துவிட்டார். என்னைக் கொடுமைப்படுத்தி வரும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விவாகரத்து வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, தாம்பத்திய உறவை மறுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் தாம்பத்திய உறவை மறுப்பது மனக் கொடுமை என அலகாபாத் உயர்நீதிமன்றம் அண்மையில் கூறியிருந்தது. 

கடந்த மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம் பாலியல் ரீதியில் அலட்சியத்தில் ஈடுபட்டதற்காக வாரணாசியைச் சேர்ந்த தம்பதியரை விவாகரத்து செய்ய அனுமதித்தது. எந்த அடிப்படையும் இல்லாமல் வாழ்க்கைத் துணையுடன் உடலுறவை மறுத்து நீண்ட காலம் நடத்துவது மன உளச்சலை ஏற்படுத்தும் கொடுமைக்கு சமமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இவர்களின் விவாகரத்து விண்ணப்பம் முன்பு குடும்பநல நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்த முடிவில் திருப்தி அடையாத யாதவ் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்தார். அவரது மேல்முறையீட்டில் யாதவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்