தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Netflix: நெட்பிளிக்ஸ் சந்தா விலை 50 சதவீதம் குறைப்பு...யாருக்கெல்லாம் தெரியுமா?

Netflix: நெட்பிளிக்ஸ் சந்தா விலை 50 சதவீதம் குறைப்பு...யாருக்கெல்லாம் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 24, 2023 12:00 PM IST

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் சந்தா கணக்கை 50 சதவீதம் வரை குறைத்துள்ளது. குறைவான வருமானம் மற்றும் குறைந்த அளவிலான சந்தாதாரர்கள் இருப்பதை கருத்தில் கொண்டு இந்த அதிரடி விலை குறைப்பை செய்துள்ளது.

நெட்பிளக்ஸ் சந்தா விலை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 50 சதவீதம் குறைப்பு
நெட்பிளக்ஸ் சந்தா விலை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 50 சதவீதம் குறைப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது இந்த விலை குறைப்பு நடவடிக்கை மூலம் வியட்னாம், இந்தோனேஷியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளில் 10 மில்லியன் சந்ததாரர்கள் வரை பயனடைவார்கள் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறைவான சந்தாதாரர்களை கொண்ட நாடுகளில் சந்தா கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் சந்தா விலையானது கணிசமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், வளர்ச்சி குறைவாக இருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கவனம் செலுத்தும் விதமாக இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீரிமிங் சேவையை வழங்கும் நிறுவனங்கள் மற்ற வணிகத்தில் இருந்த அதிக வருவாய் பெரும் நோக்கில் விலை உயர்வை செய்து வருகின்றன. இந்த சூழ்நிலை நெட்பிளிக்ஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு ஆதரவு அளிக்கு திட்டங்களுடன், குறைவான விலை பயனாளர்களுக்கு வழங்குவதன்ம மூலம் அதிக செலவை செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களை எளிதில் அடையாளம் காணுகிறது.

தற்போது அடிப்படை சந்தா விலையானது 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தளங்கள் 17 முதல் 25 சதவீதம் வரை குறைத்துள்ளன.

நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடவுள்சொல்களை பகிரும் தன்மையை பயனாளர்களிடம் குறைத்துள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக குறைவான சந்தா விலை நிர்ணயம் செய்து, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

IPL_Entry_Point