தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Net Exam : உதவிப் பேராசிரியர் மற்றும் Jrf பணிக்கான நெட் தேர்வு – விவரம் உள்ளே

NET Exam : உதவிப் பேராசிரியர் மற்றும் JRF பணிக்கான நெட் தேர்வு – விவரம் உள்ளே

Priyadarshini R HT Tamil
Apr 03, 2023 12:35 PM IST

CSIR Net Exam : மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் CSIR- UGC-NET தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்த விபரம் வருமாறு:

தேர்வின் பெயர்: CSIR-UGC-NET-2023 

கல்வித்தகுதி: அறிவியல் அல்லது தொழில்நுட்பத் துறை சார்ந்த எதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் NET தேர்வு நடைபெற்ற தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சி பெற வேண்டும்.

பட்டியலின மற்றும் இதர பின்படுத்தப்பட்ட வகுப்பு Non-Creamy Layer பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் NET தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

பிரிவுகள் வருமாறு: 1. Chemical Sciences, 2. Earth, Atmospheric, Ocean and Planetary Sciences, 3. Life Sciences, 4. Mathematical Sciences, 5. Physical Sciences

வயது: NET தேவு எழுதி கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. JRF எனப்படும் இளநிலை ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு 5 ஆண்டு சலுகை வழங்கப்படும். வயது வரம்பு 01.04.2023 தேதியின்படி நிர்ணயிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: CSIR-UGC-NET-2023 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் மாதம் 6, 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

நடைபெறும் இடங்கள்:

சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம். கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், சேலம், தஞ் சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவினர் ரூ.1,100, பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்கள் ரூ.550, பட்டியலினத்தவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.275. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.csirnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.04.2023.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்