Amit Shah On Tamil CM: ஒடிசாவில் ஒரு தமிழ் முதல்வரை திணிக்க நவீன் பட்நாயக் முயற்சிக்கிறார்! அமித் ஷா ஆவேசம்!
ஒடிசா மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, அசோகருக்கு எதிராக வீரத்துடன் போராடினார்கள். ஆனால் இன்று நவீன்பாபு ஒரு தமிழ் முதலமைச்சரை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கிறார் என வி.கே.பாண்டியனை மறைமுறைமாக சாடினார்.

ஒடிசா மாநிலத்தில் தமிழ் முதலமைச்சரை திணிக்க நவீன் பட்நாயக் முயற்சி செய்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டி உள்ளார். மேலும் நவீன் பாபுவை பொறுத்துக் கொண்டோம். ஆனால் அவரது பெயரில் இந்த தமிழ் பாபுவை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் பிறந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளருமான வி.கே.பாண்டியனை குறிவைத்து, பத்ரக் மாவட்டத்தில் உள்ள சந்த்பாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
தமிழ் முதலமைச்சரை திணிக்க முயற்சி
அப்போது “ஒடிசா மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, மாமன்னர் அசோகருக்கு எதிராக வீரத்துடன் போராடினார்கள். ஆனால் இன்று நவீன்பாபு ஒரு தமிழ் முதலமைச்சரை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கிறார். மக்கள் நவீன் பாபுவை சகித்துக் கொண்டார்கள் ஆனால் உங்கள் பெயரில் இந்த தமிழ் பாபுவை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என அவர் கூறினார்.
