Odisha Train Accident: நவீன் பட்நாயக்கிடம் பேசிய ஸ்டாலின்! ஒடிசா விரையும் எஸ்.எஸ்.சிவசங்கர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Odisha Train Accident: நவீன் பட்நாயக்கிடம் பேசிய ஸ்டாலின்! ஒடிசா விரையும் எஸ்.எஸ்.சிவசங்கர்!

Odisha Train Accident: நவீன் பட்நாயக்கிடம் பேசிய ஸ்டாலின்! ஒடிசா விரையும் எஸ்.எஸ்.சிவசங்கர்!

Kathiravan V HT Tamil
Jun 02, 2023 10:25 PM IST

விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களையும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன். - ஸ்டாலின்

ஒடிசா ரயில் விபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒடிசா ரயில் விபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகவல் அறிந்து 22 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 32 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா ரயில் விபத்து (Sarangadhara Bishnoi)

இதனிடையே, சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு விபத்து நிவாரண ரயில் விரைந்துள்ளதாக தென் கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும், 18 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன. 132 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாட்டு அறை எண்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அவசர கட்டுப்பாட்டு அறை பாலாசோர் - 67822 62286 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்தோர் விபரங்களை அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

044 - 2535 4771 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை பெற தெற்கு ரயில்வே அறிவுறுத்தி இருக்கிறது. கிழக்கு ரயில்வே, மேற்கு வங்க அரசு, ஒடிசா அரசு, தெற்கு ரயில்வே ஆகியவை உதவி எண்களை அறிவித்துள்ளன. 044 -25330952, 044-25330953 மற்றும் 044-2535477 என்ற எண்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுத்தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் சமூகவலைத்தள பதிவு:-

இந்த நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:- ஒடிசா மாநிலத்தில் Coromandel Express விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மாண்புமிகு ஒடிசா மாநில முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக் அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.

விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களையும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

உடனடியாக Helpline உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.