Amit Shah: "பொதுசிவில் சட்டம் ஒரு சமூக சீர்திருத்தம், ஜனநாயகத்தின் அடிப்படை கோரிக்கை": அமித் ஷா
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Amit Shah: "பொதுசிவில் சட்டம் ஒரு சமூக சீர்திருத்தம், ஜனநாயகத்தின் அடிப்படை கோரிக்கை": அமித் ஷா

Amit Shah: "பொதுசிவில் சட்டம் ஒரு சமூக சீர்திருத்தம், ஜனநாயகத்தின் அடிப்படை கோரிக்கை": அமித் ஷா

Marimuthu M HT Tamil
Feb 28, 2024 08:34 AM IST

பொது சிவில் சட்டம் (யு.சி.சி) என்பது ஒரு சமூக சீர்திருத்தம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை கோரிக்கை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அமித் ஷா
அமித் ஷா (Amit Shah-X)

இதுதொடர்பாக, டெல்லியில் டிவி 9 தொலைக்காட்சி சார்பாக அமைக்கப்பட்ட அரங்கில் பேசிய மத்திய அமித் ஷா, “பொது சிவில் சட்டம் ஒரு பெரிய சமூக சீர்திருத்தம். இது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோரிக்கை. நாட்டின் சட்டம், மதங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக்கூடாது. ஆனால் பொதுமக்களின் நலனுக்காகவும், நிலவும் சூழ்நிலைகளின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்”என்றார்.

மேலும் அவர் அரசியல் நிர்ணய சபை, மாநிலக் கொள்கையின் வழிகாட்டும் கோட்பாடுகளின் கீழ், நாடாளுமன்றம் சரியான நேரத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்ததை அவர் எடுத்துரைத்தார்.

அதேபோல் அவர், "இது ஒன்றும் புதிதல்ல; கட்சி தொடங்கியதில் இருந்தே நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். காங்கிரஸ் கட்சியில் என்ன தவறு நடந்தது என்று எனக்கு புரியவில்லை" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுகளும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும் இது குறித்து ஆலோசிக்கும் என்று பொது சிவில் சட்டம் கூறுகிறது. 

பொதுசிவில் சட்டம் என்றால் என்ன?: பொது சிவில் சட்டம் அல்லது யு.சி.சி என்பது மதம் அல்லது சமூகத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டதண்டனைகளை வழங்கப் பயன்படுகிறது.  

கடந்த 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசாங்கம் செய்த பணிகளை எடுத்துரைத்த அமித் ஷா, "2014ஆம் ஆண்டு முதல், மோடிஜி (பிரதமர் நரேந்திர மோடி) அவ்வப்போது கடினமான முடிவுகளை எடுத்துள்ளார். பொதுமக்களின் கண்களுக்கு ஏற்றவாறு நாங்கள் ஒருபோதும் முடிவுகளை எடுக்கவில்லை; மாறாக, பொதுமக்களின் நலன் கருதியே உருவாக்கினோம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக ராணுவத்தால் எழுப்பப்பட்டு வந்த 'ஒரு பதவி ஒரே ஓய்வூதியம்' என்ற முடிவை நாங்கள் எடுத்தோம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தோம். நாங்கள் ஜிஎஸ்டியை (சரக்கு மற்றும் சேவை வரி) அமல்படுத்தினோம். முழு உலகமும் இப்போது நம்மை உற்று நோக்குகிறது.

'டிஜிட்டல் இந்தியா' கனவை நிறைவேற்றினோம். நாட்டில் யாரும் இதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். துல்லியத் தாக்குதல் மற்றும் வான்வழித் தாக்குதல் மூலம், நமது ராணுவத்திற்கு ஏற்படும் எந்த இடையூறையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்ற செய்தியை அளித்தோம். 

முத்தலாக் முறையை ஒழித்து லட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்களுக்கு உரிமை வழங்கினோம். இன்று, காஷ்மீர், நாட்டின் பிரிக்க முடியாத பகுதியாகும். இரண்டு சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புகளுடன் நாடு இயங்க முடியாது.

பாஜக மக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினோம். கொள்கை வகுக்கும் அமைப்புகளில் பெண்கள் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டனர். நரேந்திர மோடிஜி குடும்ப ஆதிக்கம் மற்றும் திருப்திப்படுத்துதலை ஒழிக்க பணியாற்றினார். வாக்கு வங்கியைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை; பொதுமக்களின் நலன் கருதியே பணியாற்றி வருகிறோம்'' என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.