தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mahua Moitra: ‘தனது மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும்’-சுப்ரீம் கோர்ட்டில் மஹுவா மொய்த்ரா தரப்பு வாதம்

Mahua Moitra: ‘தனது மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும்’-சுப்ரீம் கோர்ட்டில் மஹுவா மொய்த்ரா தரப்பு வாதம்

Manigandan K T HT Tamil
Dec 13, 2023 12:46 PM IST

நீதிபதி எஸ்.கே.கவுல், ஏ.எம்.சிங்வியிடம், இந்த மனுவை பட்டியலிட இன்று பிற்பகல் தலைமை நீதிபதி முன் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.

திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா (PTI)
திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

தொழிலதிபர் அதானிக்கு எதிராக மக்களவைியல் கேள்விகளை எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் வாங்கியதாக மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக புகார் எழுந்தது.

இதுதொடர்பான குற்றச்சாட்டு குறித்து பாஜக எம்.பி. வினோத் குமார் சோன்கர் தலைமையில் மக்களவை நெறிமுறை குழு விசாரணை நடத்தி நவம்பர் 9ம் தேதி தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் அவர் எம்.பி. பொறுப்பில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தனது பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார் மஹுவா மொய்த்ரா.

இந்த மனு மீதான விசாரணையை விரைவுபடுத்துமாறு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கோரினார். நீதிபதி எஸ்.கே.கவுல், இந்த மனுவை மதியம் தலைமை நீதிபதி முன் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிங்வியிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை இரவு தாக்கல் செய்த தனது மனுவில், மக்களவை நெறிமுறைக் குழு அறிக்கையை வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்ட 24 மணி நேரத்திற்குள், நெறிமுறைக் குழுவின் அறிக்கை மீதான விவாதத்தின் போது சபையில் தனது வாதத்தை முன்வைக்க அனுமதிக்கப்படவில்லை என்று மொய்த்ரா குற்றம் சாட்டினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point