தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Maratha Reservation Protest: மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: சத்ரபதி சம்பாஜிநகரில் இணைய சேவை நிறுத்தம்

Maratha reservation protest: மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: சத்ரபதி சம்பாஜிநகரில் இணைய சேவை நிறுத்தம்

Manigandan K T HT Tamil
Nov 02, 2023 10:48 AM IST

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் - ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கீழ் மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு கோரும் போராட்டம் அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கீழ் மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு கோரும் போராட்டம் அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் மராத்தா கோட்டா போராட்டத்திற்கு மத்தியில் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் இணையம் - மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் இரண்டையும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்டர்நெட் சஸ்பெண்ட் விவரங்கள்

டாங்கிள்ஸ், பிராட்பேண்ட், வயர்லைன் இன்டர்நெட், ஃபைபர் இன்டர்நெட் மூலம் வழங்கப்படும் இணைய சேவைகள் புதன்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை நிறுத்தப்படும் என்று அந்த அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.

சத்ரபதி சம்பாஜிநகர் நகரத்தைத் தவிர கங்காபூர், வைஜாபூர், குல்தாபாத், புலாம்ப்ரி, சில்லோட், கன்னட், பைதான், சோகான் மற்றும் சத்ரபதி சம்பாஜிநகர் ஆகிய தாலுகாக்களுக்கு இணையத்தை முடக்குவதற்கான உத்தரவு பொருந்தும் என்று அதிகாரி கூறினார்.

இருப்பினும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் தீவைப்பு மற்றும் கலவரம் போன்ற சம்பவங்களுக்குப் பிறகு இணையச் சேவைகளை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் புதன்கிழமை போராட்டங்கள் மற்றும் தீ வைப்புகளும் பதிவாகியுள்ளன.

மராத்தா கிராந்தி மோர்ச்சா (எம்கேஎம்), வழக்கறிஞர்கள் மற்றும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆகியோர் லத்தூர் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், சுதந்திரத்திற்கு முந்தைய காலம் மற்றும் நிஜாம் காலத்தின் பதிவுகளின்படி மராத்தியர்கள் குன்பிகள் என்று கூறி, அவர்கள் OBC பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற தகுதியுடையவர்கள் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், மாநிலம் முழுவதும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அனைவரும் ஒப்புக்கொண்டதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்தார்.

“அனைத்து கட்சி கூட்டத்தில், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். இடஒதுக்கீடு சட்டத்தின் கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும் மற்றும் பிற சமூகங்களுக்கு அநீதி இழைக்காமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது" என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்