தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Manipur Video: மணிப்பூர் கொடூரம்; அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. வெளியானது முக்கிய தகவல்!

Manipur Video: மணிப்பூர் கொடூரம்; அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. வெளியானது முக்கிய தகவல்!

Karthikeyan S HT Tamil
Jul 21, 2023 10:48 AM IST

மணிப்பூரில் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் முன்னாள் ராணுவ அதிகாரி என தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் கொடூரத்தின் குற்றவாளியின் வீட்டை கிராம மக்கள் தீயிட்டு கொளுத்தினர்.
மணிப்பூர் கொடூரத்தின் குற்றவாளியின் வீட்டை கிராம மக்கள் தீயிட்டு கொளுத்தினர்.

ட்ரெண்டிங் செய்திகள்

மனிதகுலத்தையே உலுக்கிய இந்தச் கொடூரச் சம்பவம் கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் கிராமத்தில் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது. மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வரும் நிலையில், இதயத்தை கனக்கச் செய்யும் இந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஹூய்ரெம் ஹீராதாஸ் சிங் என்பவரை அம்மாநில போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், ஹூய்ரெம் ஹீராதாஸ் சிங் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும், தவ்பால் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் அவர் வசித்து வந்த வீட்டை கிராமத்தினர் அடித்து நொறுக்கியதுடன் தீயிட்டு கொளுத்தினர். மணிப்பூர் சம்பவத்தில் இன்று மேலும் மூன்று முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

 

இந்நிலையில், மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைக்கு உள்ளான பெண்களில், ஒருவரின் கணவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி இருந்தது தெரியவந்துள்ளது. அசாம் ரெஜிமெண்ட் பிரிவில் சுபேதாராக பணியாற்றிய அவர், "நான் நாட்டை காப்பாற்றினேன், என் மனைவியையும், ஊரையும் என்னால் காப்பாற்ற முடியவில்லை" என டிவி சேனல் ஒன்றுக்கு வேதனையுடன் பேட்டியளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்