தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Madhya Pradesh: பாஜக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!-காரணம் இதுதான்!

Madhya pradesh: பாஜக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!-காரணம் இதுதான்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 28, 2023 01:22 PM IST

muscular dystrophy நோயால் இரண்டு மகன்களும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து விரக்தியில் பாஜக முன்னாள் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை

சஞ்சீவ் மிஸ்ரா குடும்பம் (கோப்புபடம்)
சஞ்சீவ் மிஸ்ரா குடும்பம் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

மத்தியபிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் வசித்து வந்தார் முன்னாள் பாஜக கவுன்சிலர் சஞ்சீவ் மிஸ்ரா. இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சஞ்சீவ் மிஸ்ராவின் இரண்டு மகன்களும் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக மகன்கள் இருவருக்கும் சிகிச்சை அளித்து வந்தனர். நாட்கள் செல்லச்செல்ல நோயின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியதையடுத்து சஞ்சீவ் தம்பதியினர் மிகுந்த துக்கத்தில் இருந்துள்ளனர். இதனால் விரக்தியில் 4 பேரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று சஞ்சீவ் முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து சஞ்சீவ் மிஸ்ரா தனது முகநூலில் எதிரிகளுக்கு கூட என் குழந்தைகளுக்கு ஏற்பட்ட நோயை கடவுள் கொடுத்து விட கூடாது என்று பதிவிட்டார்.

இதையடுத்து சஞ்சீவ் குமாரின் நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவிக்க முற்பட்டனர். ஆனால் சஞ்சீவ் மொபைல் சுவிட் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் நண்பர்கள் சஞ்சீவ் மிஸ்ராவின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீடு உட்பகுதியில் பூட்டப்பட்டு இருந்து.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை திறந்து பார்த்தனர். அப்போது சஞ்சீவ் மிஸ்ரா, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு காவல்துறையினர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் 4 பேருமே உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குழந்தைகளின் அரிதான மரபணு நோய் காரணமாக விரக்தியில் இருந்த சஞ்சய் மிஸ்ரா தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

IPL_Entry_Point

டாபிக்ஸ்