Lok Sabha elections: ’மோடிக்கு முதல் வெற்றி! சூரத் தொகுதியை அன்னப்போஸ்ட்டாக வென்ற பாஜக!’ சொதப்பிய காங்கிரஸ்!
”இன்னும் நாடாளுமன்றத் தேர்தலே நடைபெறாத நிலையில் சூரத் மக்களவைத் தொகுதியை பாஜக கைப்பற்றி உள்ளது”

சூரத்தில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் (எல்) போட்டியின்றி வெற்றி பெற்றார். (x)
இந்தியாவில் இன்னும் நாடாளுமன்றத் தேர்தலே முடிவடையாத நிலையில் சூரத் தொகுதியில் போட்டி இல்லாத காரணத்தால் பாஜக வேட்பாளர் அன்னப்போஸ்டாக வெற்றி பெற்று உள்ளார்.
இது தொடர்பாக பேசி உள்ள குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், பாஜக தனது முதல் வெற்றியைப் பெற்றதாக கூறி உள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாலும், மற்ற வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதாலும் பாஜகவுக்கு இந்த வெற்றி கிடைத்து உள்ளது.