Annamalai: ’நெஞ்சை உலுக்கும் கும்பகோணம் சம்பவம்! கஞ்சா தலைநகரமாக மாறிய தமிழ்நாடு!’ விளாசும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: ’நெஞ்சை உலுக்கும் கும்பகோணம் சம்பவம்! கஞ்சா தலைநகரமாக மாறிய தமிழ்நாடு!’ விளாசும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை!

Annamalai: ’நெஞ்சை உலுக்கும் கும்பகோணம் சம்பவம்! கஞ்சா தலைநகரமாக மாறிய தமிழ்நாடு!’ விளாசும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை!

Kathiravan V HT Tamil
Published Apr 22, 2024 03:35 PM IST

’நெஞ்சை உலுக்கும் கும்பகோணம் சம்பவம்! கஞ்சா தலைநகரமாக மாறிய தமிழ்நாடு!’ விளாசும் அண்ணமலை!

கும்பகோணத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கும்பகோணத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரை பகுதியில் நேற்றைய முன் தினம் இரவு பந்தலூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து கொன்று வந்து கொண்டு இருந்தது.

அந்த பேருந்தில் ஓட்டுநர் ரமேஷும், நடத்துனர் செந்தில் குமாரும் இருந்தனர். அந்த அரசுப்பேருந்து பால்லகரை அருகே வந்த போது சாலையின் நடுவே இளைஞர்கள் பைக்கில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஓட்டுநர் ரமேஷ் ஹாரன் அடித்த நிலையில் இளைஞர்கள் நகராததால் அரசுப்பேருந்து அவர்கள் மீது உரசி சென்றதாக கூறப்படுகிறது.

ஆத்திரம் அடைந்த அந்த இளைஞரக்ள், பேருந்துக்குள் சென்று தகாத வார்த்தைகளால் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை திட்டியதுடன், ஓட்டுநர் ரமேஷை பேருந்துக்குள் இருந்து வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க முயன்ற நடத்துனர் செந்தில் குமாருக்கும் பலத்த அடி விழுந்தது.

இதனை தடுக்க முயன்றவர்களையும் ஆபாச வார்த்தைகளால் அந்த இளைஞர்கள் திட்டி உள்ளனர். அந்த வழியே சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இரண்டு பேர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த போது அவர்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சி செய்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மற்றும் நடத்துனர் செந்தில் உட்பட 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உதயகுமார், கார்த்திகேயன், மாரிமுத்து உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்து உள்ளார். அதில், தமிழகத்தில், கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. சென்னையில் கஞ்சா வியாபாரிகள், காவல்துறையினரைத் தாக்கியது, கும்பகோணம் அருகே இளைஞர்கள், கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது, இன்று, தேனியில் கஞ்சா போதையில் மனைவி, மாமனாரைத் தாக்கிய நபர் என கடந்த மூன்று நாட்களில், வெளிவந்த செய்திகள், பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது. ஆனால், குற்றம் நடந்து செய்தியான பிறகே குற்றவாளிகளைக் கைது செய்ய முன்வரும் காவல்துறைக்கு, கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? ஏன் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை?

திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாகச் செயல்பட்டதைக் கண்டுகொள்ளாமல், மூன்று ஆண்டுகளாகக் கோட்டை விட்டது போல, கஞ்சா புழக்கத்தைத் தடுக்க இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது, மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது.