தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: ரகசிய கேமரா வைத்து தம்பதிகளை மிரட்டிய லாட்ஜ் ஊழியர் - வலை விரித்து பிடித்த போலீசார்

Crime: ரகசிய கேமரா வைத்து தம்பதிகளை மிரட்டிய லாட்ஜ் ஊழியர் - வலை விரித்து பிடித்த போலீசார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 03, 2023 11:01 AM IST

கொசு விரட்டும் கருவியில் ரகசிய கேமரா வைத்து லாட்ஜில் தங்க வரும் இளம் தம்பதியினரின் அந்தரங்க விடியோக்களை பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த ஊழியரை வலை விரித்து போலீசார் பிடித்துள்ளனர்.

தம்பதிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்ற லாட்ஜ் ஊழியர் கைது
தம்பதிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்ற லாட்ஜ் ஊழியர் கைது

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த மாதம் திரூரில் அமைந்திருக்கும் பிரபல லாட்ஜில் திருமணமான இளம் தம்பதியினர் ஆன்லைன் மூலமாக ரூம் புக் செய்து தங்கியுள்ளனர். அந்த லாட்ஜின் வரவேற்பு ஊழியராக இருந்தவர் அப்துல் முனீர்.

இதையடுத்து புதுமண தம்பதியினரின் அந்தரங்க புகைப்படத்தை காட்டி அதை இணையத்தில் பரப்புவதாக கூறி அப்துல் முனீர், அந்த ஜோடியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். லாட்ஜ் பதிவேட்டில் இருந்த தம்பதியினரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அந்தரங்க புகைப்படம், விடியோக்களை அனுப்பி ரூ. 1.45 லட்சம் பணம் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் திரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் அந்த தம்பதியினர், லாட்ஜ் ஊழியருக்கு போன் மூலம் ரூ. 2 ஆயிரம் அனுப்பியுள்ளனர். பின்னர் மேற்கொண்டு பணத்தை தராமல் நகையாக தருவதாக கூறி நம்ப வைத்து அப்துல் முனீரை நேரில் வரைவழைத்துள்ளனர்.

அப்போது நகையை பெறுவதற்காக வந்த அப்துல் முனீர் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடமிருந்து லேப்டாப், கொசு விரட்டும் கருவியில் மறைத்து வைத்த கேமரா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பலரையும் அந்தரங்க விடியோ எடுத்து லாட்ஜ் ஊழியர் அப்துல் முனீர் பணம் பறித்த சம்பவம் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்