Kotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கிக்கு கட்டுப்பாடு விதித்த RBI.. வாடிக்கையாளர்கள் பணத்திற்கு பாதிப்பா?
Kotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், கடன் அட்டைகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான குறைபாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கி தனது ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கி சேனல்கள் வழியாக புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் மத்திய வங்கி புதன்கிழமை தடை விதித்துள்ளது.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நாட்டின் நான்காவது பெரிய தனியார் கடன் வழங்குநரின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை ஆய்வு செய்ததாகவும், கோடக் மஹிந்திரா அவற்றை போதுமான அளவு நிவர்த்தி செய்யத் தவறிவிட்டதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
"2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளதாகவும் அதன் தகவல் பாதுகாப்பு நிர்வாகத்தில் குறைபாடு இருப்பதாக மதிப்பிடப்பட்டது" என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.