தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kerala Cm Pinarayi Vijayan : முதல் முறையாக தண்ணீரை சேமிக்க கேரள அரசின் அசத்தல் திட்டம்

Kerala CM Pinarayi Vijayan : முதல் முறையாக தண்ணீரை சேமிக்க கேரள அரசின் அசத்தல் திட்டம்

Priyadarshini R HT Tamil
Apr 18, 2023 12:32 PM IST

Water Budget : உள்ளூரில் அமைக்கப்பட்டுள்ள சுய அரசு அமைப்புகள், தண்ணீர் இருப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றை கணக்கிட்டு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டு, நாட்டிலேயே முதல் மாநிலமாக தண்ணீர் பட்ஜெட் போடும் முதல் மாநிலமாக கேரளா அமைந்துள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம் - பினராயி விஜயன்
கோப்புப்படம் - பினராயி விஜயன்

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் தண்ணீர் பட்ஜெட்டை வெளியிட்டு, மேற்கு தொடர்ச்சி மலைக்கான மறுவாழ்வு திட்டத்தையும் துவக்கி வைத்தார். நான் இப்போது ஓடுகிறேன் என்ற திட்டத்தின் மூன்றாவது கட்டமாக அவர் இவ்விரு திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.

கேரளாவில் தண்ணீர் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், தண்ணீர் சேமிப்பதைய உறுதிபடுத்த திட்டங்களும், தண்ணீர் பயன்படுத்துவதை கணக்கிடுவதும் மிக மிக அவசியம் ஆகும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

தண்ணீர் பட்ஜெட் ஒவ்வொரு பகுதியின் மக்கள் தொகை நுகர்வுக்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது என்பதை உள்ளடக்கியது. கேரளாவில் 44 ஆறுகள், ஓடைகள் உள்ளிட்ட நிறைய தண்ணீர் வளம் இருந்தும் கோடை காலங்களில், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்ற நிகழ்வுகளால், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மக்களின் தண்ணீர் பட்ஜெட் என்பது அறிவியல்பூர்வமாக தண்ணீரை வீணாக்குவது தொடர்பாக் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுவை ஏற்படுத்துவது குறித்தும், தண்ணீர் பாதுகாப்பை வலியுறுத்துவதாகவும் அமையும்.

தண்ணீர் பட்ஜெட், மாநில தண்ணீர் வளங்கள் துறையின் நிபுணர்கள மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள் சேர்ந்து உருவாக்கியது. அதில் நீர் வளர்ச்சி மேலாண்மை மையத்தின் பங்களிப்பும் உள்ளது.

முதல் கட்டத்தில் 15 பஞ்சாயத்து மற்றும் 94 கிராம பஞ்சாயத்துகள் தண்ணீர் பட்ஜெட் தயாரித்தார்கள். குறிப்பிட்ட கால அளவுக்குள் மற்ற பஞ்சாயத்துக்கள் முடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்று பினராயி விஜயன் தெரிவித்தார். கோடை மழை நீரை விவசாயத்துக்கும், பாசனத்துக்கும் பயன்படுத்துவதை உள்ளுர் சுய அரசுகள் உறுதிபடுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்த அமைப்புகள் துவங்கப்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் ஓடைகளை காப்பாற்றுவதற்காகத்தான் நான் ஓடிக்கொண்டே இருப்பேன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசு பதவியேற்றதில் இருந்து 15,119 கிலோ மீட்டர் தூரம் சீரமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்