தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ஹிஜாப் சர்ச்சையை கிளப்பிய Mla-க்கு குல்லா போட்ட பாஜக! சீட் தராததால் கண்ணீர்

ஹிஜாப் சர்ச்சையை கிளப்பிய MLA-க்கு குல்லா போட்ட பாஜக! சீட் தராததால் கண்ணீர்

Kathiravan V HT Tamil
Apr 13, 2023 11:53 AM IST

Karnataka Election 2023: ‘கட்சியின் முடிவு குறித்து நான் வருத்தப்படவில்லை ஆனால் கட்சி என்னை நடத்திய விதம் வேதனை அளிக்கிறது’ என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார் ரகுபதி பட்.

ஹிஜாப் - சீட் மறுக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ ரகுபதி பட்
ஹிஜாப் - சீட் மறுக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ ரகுபதி பட்

ட்ரெண்டிங் செய்திகள்

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு போட்டியாக மாணவர்கள் காவித் துண்டு அணிந்து வந்ததால் பதற்றத்தை தணிக்க உடுப்பி உட்பட கடலோர கர்நாடக பகுதிகளில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

உடுப்பியை பொறுத்தவரை அரசு மேல்நிலை கல்லூரிகளில் சீருடைகள் குறித்த முடிவுகள் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலான கல்லூரி வளர்ச்சி குழுவால் எடுக்கப்படுகிறது. ஹிஜாப் அணிய அனுமதிக்க கோரிய மாணவிகளின் கோரிக்கை உடுப்பி எம்.எல்.ஏ ரகுபதி பட்டால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரின் இந்த முடிவு அவர் சார்ந்த பாஜகவின் சித்தாந்ததை கொண்டிருப்பதாக விமர்சங்கள் எழுந்தது.

”ஓவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு கேம்பஸ் ஃபிரண்ட ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் இதுபோன்ற சூழ்நிலையை ஏடுபடுத்து போது அதனை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது இந்துப்பெண்கள் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்” என ரகுபதி பட் வெளிப்படையாக பேசினார்.

ஹிஜாப் மற்றும் அதனை சுற்றி நடக்கும் சர்ச்சைகளுக்கு பின்னணியில் ரகுபதி பட் இருப்பதாக தொடர் விமர்சனங்கள் எழுந்தது.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக கட்சித் தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ரகுபதி பட் பெயர் இடம் பெறவில்லை.

ஹிஜாப் சர்ச்சைகள் கர்நாகடாவில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று அக்கட்சி கருதுவதால் ரகுபதி பட்டை கழற்றிவிட்டிருப்பதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ரகுபதி பட் ‘கட்சியின் முடிவு குறித்து நான் வருத்தப்படவில்லை ஆனால் கட்சி என்னை நடத்திய விதம் வேதனை அளிக்கிறது’ என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

கட்சியில் சீட் கொடுக்கவில்லை என்ற செய்தியை கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் சொல்ல கூட சொல்ல வில்லை என்றும் தொலைக்காட்சி செய்திகள் மூலமே இதனை தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

எல்லா இடங்களிலும் கட்சி வளர்ந்திருப்பதால் அயராது உழைக்கும் என்னை போன்றவர்கள் பாஜகவுக்கு தேவையில்லை

IPL_Entry_Point