தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka Election Results Live: 34 ஆண்டுகள் கழித்து கர்நாடகாவில் மிக பெரிய வெற்றி பெற்ற காங்கிரஸ்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

Karnataka Election Results Live: 34 ஆண்டுகள் கழித்து கர்நாடகாவில் மிக பெரிய வெற்றி பெற்ற காங்கிரஸ்

03:11 PM ISTMay 13, 2023 08:41 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:11 PM IST

karnataka elections results Update: கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? அதற்கான வாக்கு எண்ணிக்கையில் தொடங்கி, முடிவுகள் வரை அனைத்தையும் துல்லியமாக வழங்குகிறது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.

Sat, 13 May 202303:11 PM IST

கர்நாடக தேர்தல் வெற்றி நிலவரம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வெற்றி நிலவரம்:

காங்கிரஸ்  - 136 

பாஜக - 65

மதசார்பற்ற ஜனதாதளம் - 10

இதர கட்சிகள் - 4

Sat, 13 May 202303:06 PM IST

கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் - டிகே சிவகுமார் அறிவிப்பு

கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.சிவகுமார் அறிவித்துள்ளார்.

 

Sat, 13 May 202302:11 PM IST

வெறுப்பையும் மதவெறியையும் விரட்டியடித்த கன்னடர்களுக்கு நன்றி - பிரகாஷ்ராஜ்

வெறுப்பையும் மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி. வெறுப்பை... கபடத்தை… விரட்டிய சுயமரியாதை கன்னடர்களுக்கு பாராட்டுக்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட் செய்துள்ளார்.

Sat, 13 May 202301:48 PM IST

கர்நாடக மக்கள் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் - விஜயகாந்த்

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்

Sat, 13 May 202301:40 PM IST

காங்கிரஸில் போட்டியிட்ட 9 இஸ்லாமியர்கள் வெற்றி

கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 9 இஸ்லாமியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்

Sat, 13 May 202312:51 PM IST

பாஜகவின் தந்திரங்கள் பலிக்காது - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் காட்சிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பாஜகவின் தந்திரங்கள் இனி பலிக்காது என்றார்.

Sat, 13 May 202312:51 PM IST

கர்நாடகாவில் ஆட்சிக்கு வருவது மிகப்பெரிய பொறுப்பு - பிரியங்கா காந்தி

கர்நாடகாவில் ஆட்சிக்கு வருவது மிகப்பெரிய பொறுப்பு என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி  தெரிவித்தார். "சில உத்தரவாதங்களுடன் மக்களிடம் சென்றோம், அவற்றை நிறைவேற்ற வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொதுமக்கள் கூறுவார்கள்," என்றார்.

Sat, 13 May 202312:09 PM IST

பிரதமர் மோடி வாழ்த்து

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Sat, 13 May 202311:52 AM IST

ஆட்சிக்கு அமைக்க தேவையான தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி!

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Sat, 13 May 202311:43 AM IST

பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எனது வாழ்த்துகள். சர்வாதிகாரம் - மதவாதம் - மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும். பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது என உதயநிதி ட்விட் செய்துள்ளார்.

Sat, 13 May 202311:43 AM IST

அனைத்து தேர்தல்களிலும் பாஜக பாடம் கற்கும் - ராஜஸ்தான் முதலமைச்சர்

கர்நாடக தேர்தல் குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், "பாஜக கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய அனைத்து தேர்தல்களிலும் அவர்கள் பாடம் கற்பார்கள்" என்றார்.

Sat, 13 May 202311:21 AM IST

தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தோல்வி

சிக்கமங்களூரு தொகுதியில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தம்மையா 8,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Sat, 13 May 202311:11 AM IST

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெற்றி

கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெற்றி பெற்றார்.

Sat, 13 May 202311:08 AM IST

காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்படும் - பிரியங்கா காந்தி

கர்நாடக மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்து உள்ளார்.

Sat, 13 May 202311:08 AM IST

கிருஷ்ணராஜா தொகுதியில் பாஜக வெற்றி

கிருஷ்ணராஜா தொகுதியில் எம்.கே.சோமசேகரை எதிர்த்து பாஜகவின் டி.எஸ்.ஸ்ரீவத்சா 7,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Sat, 13 May 202310:52 AM IST

காங்கிரஸ் கட்சிக்கு கமல் ஹாசன் வாழ்த்து

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"பிரிவினையை நிராகரிக்க வேண்டும் என கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள். அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்தனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றி பெற்ற விதத்திற்கும் பாராட்டுக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

Sat, 13 May 202310:19 AM IST

வெற்றிக்கான பெருமை ராகுல் காந்தியையே சாரும்- சித்தராமையா

இந்த தேர்தலில் பெற்றுள்ள வெற்றிக்கான பெருமை ராகுல் காந்தியையே சாரும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Sat, 13 May 202310:00 AM IST

இந்திய மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் - ப.சிதம்பரம்

இந்திய மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் என கர்நாடக தேர்தல் குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

Sat, 13 May 202309:45 AM IST

பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி வெற்றி - காங்கிரஸ் கட்சிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து! 

பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Sat, 13 May 202309:39 AM IST

பாஜக இந்த முறை குதிரை பேரம் செய்ய வாய்ப்பில்லை - செல்வப்பெருந்தகை!

கர்நாடகாவில் பாஜக இந்த முறை குதிரை பேரம் செய்ய வாய்ப்பில்லை. குறுக்கு வழியில் ’ஆபரேஷன் லோட்டஸ்’ என பாஜக முயற்சி செய்தாலும் அது பலிக்காது என காங்கிரஸ் எம்.எல்.ஏ  செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Sat, 13 May 202309:36 AM IST

48 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி!

அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 76 தொகுதிகளில் 48 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி

Sat, 13 May 202309:27 AM IST

முக்கியமான 5 வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் - ராகுல்காந்தி!

முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு கர்நாடக மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். வெறுப்பு உணர்வுகளை எதிர்த்து கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் அளித்த முக்கியமான 5 வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Sat, 13 May 202309:21 AM IST

ஜனநாயகம் வென்றது - ராகுல் காந்தி

கர்நாடக தேர்தல் வெற்றி என்பது மக்களுக்கான வெற்றி. தேர்தல் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், தலைவர்களுக்கு நன்றி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Sat, 13 May 202309:06 AM IST

தென்னிந்திய மக்கள் பாஜகவை புறக்கணித்துள்ளனர் - சத்தீஸ்கர் முதல்வர்!

தென்னிந்திய மக்கள் பாஜகவை புறக்கணித்துள்ளதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

Sat, 13 May 202308:58 AM IST

இந்த தோல்வி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது - பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா

கர்நாடகா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்.அறிவித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும். பாஜகவின் இந்த தோல்வி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. கடுமையாக உழைத்தும் தோல்வியை சந்தித்துள்ளோம் என பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Sat, 13 May 202308:53 AM IST

காங்கிரஸ் வெற்றி -தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ். நாடு முழுவதும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Sat, 13 May 202308:45 AM IST

ராஜினாமா செய்கிறார் பசவராஜ் பொம்மை?

கர்நாடக முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்ய பசவராஜ் பொம்மை முடிவு. பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க பசவராஜ் பொம்மை திட்டம் என தகவல்.

Sat, 13 May 202308:41 AM IST

கர்நாடகா முதலமைச்சர் யார் - சித்தராமையா சொன்ன பதில்!

கர்நாடகா முதலமைச்சர் யார் என்பதை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வதன் அடிப்படையில் கட்சி மேலிடம் முடிவு செய்யும் என சித்தராமையா கூறியுள்ளார்.

Sat, 13 May 202308:40 AM IST

தான் ஆளும் ஒரே தென்னிந்திய மாநிலத்தையும் இழந்தது பாஜக!

தொடர்ந்து பின்னடைவை சந்திக்கும் சிட்டிங் அமைச்சர்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு பெல்லாரி ஊரகம் தொகுதியிலும், விவசாயத்துறை அமைச்சர் பி.சி.பாட்டில், ஹிரேகேரு தொகுதியிலும் தோல்வி.

Sat, 13 May 202308:30 AM IST

முதலமைச்சராக சித்தராமையா தேர்வு? 

கர்நாடகாவில் முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்

Sat, 13 May 202308:27 AM IST

ராகுல்காந்தி 2 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்!

கர்நாடக வெற்றி குறித்து 2 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திக்கிறார்

Sat, 13 May 202308:25 AM IST

பாஸ்கர் ராவ் - ஐ வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் சமீர் அகமதுகான் வெற்றி! 

சாம்ராஜ்பேட் தொகுதியில் பாஜக வேட்பாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான பாஸ்கர் ராவ் - ஐ வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் சமீர் அகமதுகான் வெற்றி!

பெங்களூரு காவல் ஆணையராக இருந்த பாஸ்கர் ராவ், பணி ஓய்வுக்கு பிறகு ஆம் ஆத்மியில் இணைந்து பின்னர் பாஜகவுக்கு தாவினார்.

Sat, 13 May 202308:13 AM IST

யார் அடுத்த முதல்வர்? 

 “முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்” 

கர்நாடக தேர்தல் வெற்றிக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

Sat, 13 May 202308:03 AM IST

யார் அடுத்த முதல்வர்!

“புதிதாக பொறுப்பேற்க உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்த முதல்வரை தேர்வு செய்வார்கள் அதன் அடிப்படையில் முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்”

- சித்தராமையா பேட்டி

Sat, 13 May 202308:00 AM IST

ஐ.ஏ.எஸ் அமுதாவின் கணவர்  சாதனை!

ரெய்பேக் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட அமுதா ஐ.ஏ.எஸின் கணவரான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷம்பு கலோலிகர் மதியம் 1 மணி நிலவரப்படி 47,217 வாக்குகளுடன் (33% வாக்குகள்) பெற்று தற்போது 2வது இடத்தில் உள்ளார்

Sat, 13 May 202307:53 AM IST

 கடவுளிடம் உருகிய டி.கே.சிவக்குமார்

Sat, 13 May 202307:52 AM IST

சித்தராமையாவின் பெயரை பச்சைக்குத்தியுள்ள தொண்டர்!

Sat, 13 May 202307:47 AM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றியை தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, சித்தராமையா ஆகியோரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Sat, 13 May 202307:43 AM IST

தற்போதைய நிலவரம்

பாஜக - 66

காங்கிரஸ் -131

ம.ஜ.த -22

மற்றவை -05

Sat, 13 May 202307:53 AM IST

டி.கே.சிவக்குமார் கண்ணீர் மல்க பேட்டி!

கனகாபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் 72% வாக்குகள் பெற்று வெற்றி!

செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் மல்க தொண்டர்களுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார் 

Sat, 13 May 202307:27 AM IST

தற்போதைய நிலவரம்

 

பாஜக - 66

காங்கிரஸ் -129

ம.ஜ.த -22

மற்றவை -07

Sat, 13 May 202307:25 AM IST

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அமைச்சர் அசோகா 8530 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்துள்ளார்.

Sat, 13 May 202307:23 AM IST

``இது பிரதமர் மோடியின் தோல்வி"  - கொக்கரித்த சத்தீஸ்கர் முதல்வர்!

தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்தது போலவே அமைந்திருக்கிறது. பிரதமர் மோடி தன்னை முன்னிலைப்படுத்தி தான் வாக்கு சேகரித்தார். எனவே இது மோடியின் தோல்வி. 

இதன் மூலம் பஜ்ரங் பாலி யாருடன் நிற்கிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம். பஜ்ரங் பாலியின் ஆயுதம் ஊழலின் தலையை நசுக்கிவிட்டது. பா.ஜ.க-வின் கதை முடிந்துவிட்டது"

-பூபேஷ் பாகேல் சத்தீஸ்கர் முதல்வர்

Sat, 13 May 202307:20 AM IST

வெற்றிக்களிப்பில் காங்கிரஸ்!

தனது இல்லத்தின்முன் திரண்ட தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார்!

 

 

Sat, 13 May 202307:12 AM IST

பெரும்பான்மைக்கு தேவையான 113 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி முன்னிலை!

 

காங்கிரஸ் - 123

பாஜக் - 69

மஜத - 25

பிறவை - 07

மொத்தம் - 224

பெரும்பான்மைக்கு - 113

Sat, 13 May 202307:10 AM IST

 ‘மோடியே வந்தாலும் எதுவும் நடக்காது என்பது உண்மையானது ’ -கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

பிரதமர் மோடியே வந்தாலும் எதுவும் நடக்காது என்று நாங்கள் சொன்னது போலவே நடந்துள்ளது. 120 இடங்களில் முன்னிலை வகிக்கிறோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே பெரும்பான்மையை பெறுவோம்

- கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

Sat, 13 May 202307:00 AM IST

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றி!

ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்று இருக்கிறார். 

Sat, 13 May 202306:57 AM IST

விவசாயத்துறை அமைச்சர் தோல்வி!

விவசாயத்துறை அமைச்சர் பி.சி.பாட்டில் ஹிரேகேரு தொகுதியில் தோல்வி

Sat, 13 May 202306:51 AM IST

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி 

Sat, 13 May 202306:49 AM IST

  வெற்றி ஏணியில் காங்கிரஸ்!

43% வாக்குகளுடன் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்!

Sat, 13 May 202306:38 AM IST

கர்நாடகா போக்குவரத்து துறை அமைச்சர் பி.ஸ்ரீ ராமுலு தோல்வி!

பெல்லாரி ஊரகம் தொகுதியில் போட்டியிட்ட, கர்நாடகா போக்குவரத்து துறை அமைச்சர் பி.ஸ்ரீ ராமுலு தோல்வி!

Sat, 13 May 202306:36 AM IST

பெங்களூர் செல்லும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள்!

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி தற்போது பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் தங்கள் கட்சி வேட்பாளர்களை பெங்களூருக்கு வர சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு வர உத்தரவு என்று தகவல்

Sat, 13 May 202306:34 AM IST

ராகுல் யாத்திரை: காங்கிரஸ் வெற்றி

ராகுலின் தேச ஒற்றுமை யாத்திரை கர்நாடக தேர்லில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெய்லாட் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா சத்தீஸ்கரில் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

Sat, 13 May 202306:30 AM IST

8 தொகுதிகளில் 7 ல் காங்கிரஸ் வெற்றி

கர்நாடகாவில் தேர்தல் வெற்றிகள் அறிவிக்கப்பட்டுள்ள 8 தொகுதிகளில் 7ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

Sat, 13 May 202306:27 AM IST

கர்நாடகா தேர்தல் முன்னிலை நிலவரம்

காங்கிரஸ் - 122

பாஜக - 71

ஜேடிஎஸ் - 25

மற்றவை - 6

Sat, 13 May 202306:22 AM IST

தொடங்கியது காங்கிரஸ் பூசல்

காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா மகன் தனது தந்தை கர்நாடகாவின் நலன் கருதி முதல்வர் ஆக வேண்டும் என பேசி இருந்த நிலையில் டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sat, 13 May 202306:16 AM IST

கர்நாடகா தேர்தல் முன்னிலை நிலவரம்

காங்கிரஸ் - 120

பாஜக - 72

ஜேடிஎஸ் - 26

மற்றவை - 6

Sat, 13 May 202306:16 AM IST

லக்ஷமன் சவடி 70 சதவிகித வாக்குகள் வெற்றி

அத்தானி தொகுதியில் 70 சதவிகித வாக்குகள் பெற்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட லக்ஷமன் சவடி வெற்றி பெற்றுள்ளார்.

இவர் பாஜக அரசின் முன்னாள் துணை முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 13 May 202306:16 AM IST

ஐஏஎஸ் அதிகாரிக்கு 2வது இடம்

 

தமிழ்நாட்டில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாம்பு கல்லோலிகர், ரைபேக் தொகுதியில் சுயேட்சையாக களம் கண்டார். இவர் 9 சுற்று முடிவில் 23,539 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர் ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 13 May 202306:08 AM IST

ஹசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் வெற்றி

 

கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஹசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜகவிடம் ஹசன் தொகுதியை ஸ்வரூப் கைப்பற்றி உள்ளார் என தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. 

Sat, 13 May 202306:02 AM IST

மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் ஆலோசனை

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இன்று பிற்பகல் 1 மணிக்கு  ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

Sat, 13 May 202306:01 AM IST

கர்நாடகா தேர்ல்: முக்கிய வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம்

பசவராஜ் பொம்மை (பாஜக) - 21519 வாக்குகள் முன்னிலையில்;

சித்தராமையா (காங்கிரஸ்) - 5288 வாக்குகள் முன்னிலை;

டி.கே.சிவக்குமார் (காங்கிரஸ்) - 41746 வாக்குகள் முன்னிலை;

எச்.டி.குமாரசாமி (மஜத) - 524 வாக்குகள் முன்னிலை;

நிகில் குமாரசாமி (மஜத) - 14300 வாக்குகள் பின்னடைவு

Sat, 13 May 202306:01 AM IST

கர்நாடகா தேர்தல் முன்னிலை நிலவரம்

காங்கிரஸ் - 119

பாஜக - 71

ஜேடிஎஸ் - 27

மற்றவை - 7

Sat, 13 May 202305:55 AM IST

காங்கிரஸ்க்கு தனிப்பெரும்பான்மை-சித்தராமையா நம்பிக்கை

காங்கிரஸ்க்கு தனி பெரும்பான்மை கிடைக்கும் என காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்த ராமையா செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Sat, 13 May 202305:51 AM IST

கர்நாடக வாக்கு எண்ணிக்கை-தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி கட்சி வாரியாக பெற்றுள்ள வாக்கு சதவீதங்கள்:

காங்கிரஸ் 43 %

பாஜக 36%

ஜனதாதளம் 12.8%

Sat, 13 May 202305:48 AM IST

கர்நாடக தேர்தல் பின்னடைவு : அமித் ஷா அவசர ஆலோசனை

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பாஜக பின்னடைவை சந்தித்துவருகிறது. இந்நிலையில் அமித் ஷா தேர்தல் நிலவரம் குறித்து அவசர ஆலோசனை நடத்துகிறார்.

Sat, 13 May 202305:49 AM IST

சல்லகேரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடகாவில் உள்ள சல்லகேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரகுமூர்த்தி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Sat, 13 May 202305:45 AM IST

கர்நாடகா தேர்தல் முன்னிலை நிலவரம்

காங்கிரஸ் - 117

பாஜக - 73

ஜேடிஎஸ் - 27

மற்றவை - 7

Sat, 13 May 202305:44 AM IST

நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

கர்நாடகா வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

Sat, 13 May 202305:42 AM IST

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான KGF தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூப கலா முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அஷ்வினி சம்பங்கி பின்னடைவை சந்தித்துள்ளார்.

Sat, 13 May 202305:42 AM IST

கர்நாடகாவில் 8 அமைச்சர்கள் பின்னடைவு

கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ஹாலப்பா ஆச்சார், சோமண்ணா, பி.சி.நாகேஷ், நாராயண கவுடா, முருகேஷ் நிராணி, ஸ்ரீராமலு, சுதாகர் மற்றும் கோவிந்த கார்ஜோள் ஆகிய 8 அமைச்சர்கள் பின்னடைவில் உள்ளனர்

Sat, 13 May 202305:25 AM IST

பெரும்பான்மைக்கான 113 தொகுதிகளை கடந்து காங்கிரஸ் முன்னிலை

கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மைக்கான 115 என்ற எண்ணிக்கை கடந்து 116 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

Sat, 13 May 202305:25 AM IST

கர்நாடகா தேர்தல் முன்னிலை நிலவரம்

காங்கிரஸ் - 116

பாஜக - 74

ஜேடிஎஸ் - 27

மற்றவை - 7

Sat, 13 May 202305:21 AM IST

தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வரும் காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களூருவுக்கு அழைத்து செல்ல 12 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Sat, 13 May 202305:15 AM IST

காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை

கர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 8 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

Sat, 13 May 202305:14 AM IST

குமாரசாமி பெங்களூருவில் உள்ள கோவிலில் வழிபாடு

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் முதல்வரும், ஜே.டி.எஸ்., தலைவருமான குமாரசாமி பெங்களூருவில் உள்ள கோவிலில் சென்று வழிப்பட்டார்.

Sat, 13 May 202305:08 AM IST

மல்லியார் ஜூன கார்கே மகன் முன்னிலை

கர்நாடக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சித்தாபூர் தொகுதியில் மல்லியார் ஜூன கார்கே மகன் பிரியங் கார்கே முன்னிலை வகிக்கிறார்.

Sat, 13 May 202305:06 AM IST

மத்திய பெங்களூரில் பாஜக முன்னிலை

மத்திய பெங்களூரில் உள்ள 7 தொகுதிகளில் 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

Sat, 13 May 202305:06 AM IST

கர்நாடகா தேர்தல் முன்னிலை நிலவரம்

காங்கிரஸ் - 111

பாஜக - 78

ஜேடிஎஸ் - 28

மற்றவை - 7

Sat, 13 May 202305:00 AM IST

என் தந்தை முதல்வராக வேண்டும் - சித்தராமையா மகன் விருப்பம்

பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற நாங்கள் எதையும் செய்வோம். கர்நாடகாவின் நலன் கருதி என் தந்தை மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற யதீந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Sat, 13 May 202304:57 AM IST

கர்நாடகா தேர்தல் முன்னிலை நிலவரம்

காங்கிரஸ் - 109

பாஜக - 82

ஜேடிஎஸ் - 27

மற்றவை - 6

Sat, 13 May 202304:57 AM IST

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் பின்னடைவு

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் காந்திநகர் தொகுதியில்  பின்னடைவை சந்தித்துள்ளார்.

Sat, 13 May 202304:57 AM IST

நிசப்தமானது கமலாலயம்

கர்நாடக தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் நிசப்தமாக உள்ளது.

Sat, 13 May 202304:51 AM IST

பெங்களூரு முன்னாள் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் பின்னடைவு

சாம்ராஜ் பேட்டை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பெங்களூரு முன்னாள் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜமீர் அகமத் கான் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

Sat, 13 May 202304:48 AM IST

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தொடர் பின்னடைவு

கர்நாடகா வாக்கு எண்ணிக்கையில் சிக்மகளூரு தொகுதியில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

Sat, 13 May 202304:46 AM IST

கர்நாடகா தேர்தல் முன்னிலை நிலவரம்

காங்கிரஸ் - 108

பாஜக - 83

ஜேடிஎஸ் - 27

மற்றவை - 5

Sat, 13 May 202304:46 AM IST

சத்திய மூர்த்தி பவனில் வெற்றி கொண்டாட்டம்!

கர்நாடக வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனில் தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இனிப்புகளை பகிர்ந்து வெடிவெடித்து வெற்றியை கொண்டாட தொடங்கினர்

Sat, 13 May 202304:46 AM IST

ஜெகதீஷ் ஷெட்டர் தொடர்ந்து பின்னடைவு

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் சார்பில் ஹீப்ளி மத்திய தார்வாட் தொகுதியில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

Sat, 13 May 202304:38 AM IST

கர்நாடகா தேர்தல் முன்னிலை நிலவரம்

காங்கிரஸ் - 106

பாஜக - 86

ஜேடிஎஸ் - 27

மற்றவை - 5

Sat, 13 May 202304:34 AM IST

பிரியங்கா காந்தி வழிபாடு

கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் தற்போது முன்னிலையில் உள்ளது. சிம்லாவில் உள்ள ஜக்கு கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்து வருகிறார்

Sat, 13 May 202304:33 AM IST

6 பாஜக அமைச்சர்களுக்கு பின்னடைவு

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக  நடைபெற்று வரும் நிலையில், 6 பாஜக அமைச்சர்களுக்கு பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Sat, 13 May 202304:28 AM IST

முன்னிலை நிலவரம் 

காங்கிரஸ் - 111

பாஜக - 82

ஜேடிஎஸ் - 27

மற்றவை - 4

Sat, 13 May 202304:26 AM IST

கேஜிஎஃப்பில் காங். முன்னிலை 

கேஜிஎஃப் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. கோலார் தொகுதியில் மஜத முன்னிலை வகிக்கிறது. 

Sat, 13 May 202304:26 AM IST

சவுடி முன்னிலை 

லக்ஷ்மன்  சவுடி அதனி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.  

Sat, 13 May 202304:26 AM IST

கார்கே மகன்  முன்னிலை

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன கார்கே மகன் பிரியங் கார்கே சித்தாப்பூர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். 

Sat, 13 May 202304:18 AM IST

முன்னிலை நிலவரம் 

காங்கிரஸ் - 111

பாஜக - 82

ஜேடிஎஸ் - 27

மற்றவை - 4

Sat, 13 May 202304:17 AM IST

குமாரசாமி முன்னிலை 

சென்னாபட்டனாவில் குமாரசாமி முன்னிலையில் உள்ளார். 

Sat, 13 May 202304:17 AM IST

பாஜகவின் 6 அமைச்சர்கள் பின்னடைவு 

6 பாஜ அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். 

Sat, 13 May 202304:06 AM IST

முன்னிலை நிலவரம் 

காங்கிரஸ் - 109

பாஜக - 83

ஜேடிஎஸ் - 28

மற்றவை - 4

Sat, 13 May 202304:06 AM IST

முன்னிலை வேட்பாளர்கள் பெங்களூரில் அஜராகுங்கள்

காங்கிரஸின் முன்னிலை வேட்பாளர்கள் பெங்களூர் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமை அழைத்துள்ளது. 

Sat, 13 May 202303:47 AM IST

ராகுல் ராக்ஸ் 

காங்கிரஸ் - 110

பாஜக - 86

ஜேடிஎஸ் - 25

மற்றவை - 3

Sat, 13 May 202303:40 AM IST

முன்னிலை நிலவரம்

காங்கிரஸ் - 111

பாஜக - 89

ஜேடிஎஸ் - 21

மற்றவை - 3

Sat, 13 May 202303:37 AM IST

முன்னிலை நிலவரம் 

காங்கிரஸ் - 112

பாஜக - 89

ஜேடிஎஸ் - 21

மற்றவை - 2

Sat, 13 May 202303:34 AM IST

முன்னிலை நிலவரம் 

காங்கிரஸ் - 107 

பாஜக - 91 

ஜேடிஎஸ் - 24 

மற்றவை - 2 

Sat, 13 May 202303:33 AM IST

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பின்னடைவு 

சிக்மளூருவில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பின்னடைவை சந்தித்துள்ளார். 

Sat, 13 May 202303:30 AM IST

காங்கிரஸ் கொண்டாட்டம் 

டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் கொண்டாட்டம். தற்போது வரை காங்கிரஸ் முன்னிலை பெற்றிருப்பதால் காங்கிரஸ் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டத்தை துவங்கியது.  

Sat, 13 May 202303:33 AM IST

முதல் சுற்றில் காங். முன்னிலை

முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 

காங்கிரஸ் - 107 

பாஜக - 89

மஜத - 26 

மற்றவை - 2

Sat, 13 May 202303:25 AM IST

காங். முன்னிலை நிலவரம் 

முதல் சுற்று அடிப்படையில் நிலவரம் - 101 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக 92, மஜத 26, மற்றவை 2  

Sat, 13 May 202303:23 AM IST

குமாரசாமி மீண்டும் பின்னடைவு 

சன்னாபட்னாவில் மஜத தலைவர் குமாரசாமி மீண்டும் பின்னடைவு.

Sat, 13 May 202303:23 AM IST

வருணா தொகுதியில் சித்தராமையா முன்னிலை 

முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் வேட்பாளருமான சித்தராமையா முன்னிலை வகிக்கிறார். 

Sat, 13 May 202303:23 AM IST

ஜெகதீஷ் ஷெட்டர் பின்னடைவு 

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் சார்பில் ஹீப்ளி மத்திய தார்வாட் தொகுதியில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் பின்னடைவு.  

Sat, 13 May 202303:23 AM IST

எடியூரப்பா மகன் முன்னிலை 

முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா, ஷிகாபுரி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். 

Sat, 13 May 202303:13 AM IST

முன்னிலை நிலவரம்

100 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. 85 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மஜத 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்றவை 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

Sat, 13 May 202303:13 AM IST

குமாரசாமி மீண்டும் முன்னிலை 

சென்னாப்பட்னாவில் குமாரசாமி மீண்டும் முன்னிலை வகிக்கிறார் 

Sat, 13 May 202303:11 AM IST

தமிழர்கள் அதிகமுள்ள தொகுதியில் முன்னிலை நிலவரம் 

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலை, காந்தி நகர் தொகு வேட்பாளர். தமிழர்கள் அதிகமுள்ள புலிகேசி தொகுதியில் பிஎஸ்பி முன்னிலை 

Sat, 13 May 202303:09 AM IST

தபால் வாக்குகள் நிலவரம்

95 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. 85 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மஜத 23 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்றவை 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

Sat, 13 May 202303:04 AM IST

தபால் வாக்குப்பதிவு முடிவு 

தபால் வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை துவக்கம்

 

Sat, 13 May 202303:03 AM IST

குமாரசாமி பின்னடைவு 

சென்னாபட்னாவில் மதசார்பற்ற ஐனதாதள குமாரசாமி பின்னடைவு 

Sat, 13 May 202302:56 AM IST

ஜெகதீஷ் ஷெட்டர், குமாராசாமி முன்னிலை 

சென்னாபட்னா மஜத குமாரசாமி முன்னிலை, ஜெகதீஷ் ஷெட்டர் ஹீபள்ளளி தர்வாட் மத்தியில், காங்கிரஸ் முன்னிலை 

Sat, 13 May 202302:50 AM IST

பசவராஜ் பொம்மை, டி.கே.சிவகுமார் முன்னிலை 

ஷிக்கான் தொகுதியில் பசவராஜ் பொம்மை முன்னிலை வகிக்கிறார். கனகபுரா தொகுதியில் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் உள்ளார். 

Sat, 13 May 202302:49 AM IST

பாஜக 67 இடங்களில் முன்னிலை

67 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. 64 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மஜத 9 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

Sat, 13 May 202302:38 AM IST

தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை 

கர்நாடகாவில் சற்றுமுன் தொடங்கி உள்ள வாக்கு எண்ணிக்கையில் பாஜக 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

Sat, 13 May 202302:38 AM IST

கர்நாடகாவில் மகுடம் யாருக்கு? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Sat, 13 May 202302:21 AM IST

பாஜக முதல்வர்  பசவராஜ் பொம்மை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், ஹூப்ளியில் உள்ள பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மையின் இல்லத்துக்கு இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Sat, 13 May 202302:20 AM IST

செல்போன்களுக்கு அனுமதி மறுப்பு

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த சோதனைக்கு பிறகே கட்சி நிர்வாகிகள் அனுமதிக்கப்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் செல்போன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Sat, 13 May 202302:17 AM IST

முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார்!

முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார்

கூட்டணி குறித்து எந்த கட்சியும் எங்களை இது வரை தொடர்பு கொள்ளவில்லை

- மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி

Sat, 13 May 202302:15 AM IST

வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கபட்ட அறைகள் திறப்பு

கர்நாடகா சட்டமன்ற தேர்தலின் போது பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்பட்டுள்ளது. 

Sat, 13 May 202302:10 AM IST

பெங்களூருவில் 144 தடை

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு  இடையே கர்நாடக வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Sat, 13 May 202302:08 AM IST

டெல்லி: யாகம் வளர்த்த காங்கிரஸ்

கர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெற்றி பெற வேண்டி அக்கட்சியினர் யாகம் நடத்தி உள்ளனர்.

Sat, 13 May 202302:08 AM IST

கர்நாடகா வாக்கு எண்ணிக்கை: 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Sat, 13 May 202301:59 AM IST

கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு

பாஜக மற்றும் காங்கிரசுக்கு பெரும்பானமை கிடைக்காவிடில் மஜதாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு

Sat, 13 May 202301:56 AM IST

கூட்டணி ஆட்சி அமைக்க வியூகம்

தொங்கு சட்ட சபை ஏற்பட்டால் கூட்டணி ஆட்சி அமைக்க வியூகம்

Sat, 13 May 202301:53 AM IST

கர்நாடக சட்டமன்ற தேர்தல் - காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று 8 மணிக்கு தொடங்குகிறது. 

Fri, 12 May 202303:34 PM IST

கர்நாடக முழுவதும் பலத்த பாதுகாப்பு

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கர்நாடகா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Fri, 12 May 202303:33 PM IST

கர்நாடகாவின் அனைத்து தொகுதி முடிவுகள்

கர்நாடக மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலிருந்தும் எங்கள் குழும செய்தியாளர்கள் வழங்கும் பிரத்யேக முடிகள் வெளியிடப்படும்.

Fri, 12 May 202303:33 PM IST

கர்நாடக தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்?

இன்று காலையில் தொடங்கும் வாக்குப்பதிவு முடிவுகள் அடுத்தடுத்து வழங்க உள்ளோம்.