தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Article 370 Verdict: காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம் செல்லும்! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Article 370 verdict: காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம் செல்லும்! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Kathiravan V HT Tamil
Dec 11, 2023 11:08 AM IST

“ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக மூன்று விதமான மாறுபட்ட தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது”

தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்
தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியும், ஜம்மு, காஷ்மீர், லடாக் என மூன்று யூனியன் பிரதேசங்களாக பிரித்து கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி 16 நாட்கள் வழக்கு விசாரணை நடந்து வந்தது. குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது மாநிலத்தில் ஏற்படும் மாற்ற முடியாத விளைவுகளை மத்திய அரசு எடுக்க முடியாது என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதற்கு எதிராக மனுதாதர்கள் யாரும் கருத்துகளை கூறாததால் அதன் செல்லுபடியாகும் தன்மை குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க தேவையில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 

மேலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவான 370 சட்டம் தற்காலிகாமானதுதான், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் ஜம்மு காஷ்மீர் என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தனித் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.  

மேலும், ஜம்மு காஷ்மீர் என்பது மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது அரசியல் அமைப்பு சாசனத்தில் உறுதி ஆகிறது.  அவசர சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளை கொண்டுள்ளது.

தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பின் சில விவரங்கள்:-

  • ஜம்மு காஷ்மீரில் வரும் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்
  • லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும்
  • சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லை
  • விரைவில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளை இணைத்து யூனியன் பிரதேசம் ஆக்க வேண்டும்

IPL_Entry_Point

டாபிக்ஸ்