தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Jacqueline Fernandez Grants Bail And Other Trending News For National And World On September 26

Jacqueline Fernandez: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன்

Karthikeyan S HT Tamil
Sep 26, 2022 05:38 PM IST

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன், குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்த மைசூரு தசரா திருவிழா உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.

ட்ரெண்டிங் செய்திகள்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவரும் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் தனது கட்சிக்கு ஜனநாயக ஆசாத் கட்சி என பெயரிட்டுள்ளார்.

இமாசலப் பிரதேச தலைநகருக்கும் புது தில்லிக்கு இடையிலான விமானப் போக்குவரத்து சேவை 2 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.

இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணத்தின் போது சிறுவர்களுடன் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கால்பந்து விளையாடும் வீடியோ வைரலாகி வருகின்றது.

200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு தில்லி பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு அருகே மேம்பாலம் மற்றும் ஆரம்பச் சுகாதார மையத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திறந்துவைத்தார்.

ரஷ்யா உத்முர்டியா மாகாணத்தில் துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்த நபா் கண்மூடித்தனமாக சுட்டதில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனா்.

தில்லி அருகே உள்ள சீலம்பூர் பகுதியில் 12 வயது சிறுவனை 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் இன்று பூமிக்கு அருகே வரவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்கவுள்ள நிலையில் பக்தர்களுக்கு வழங்க 10 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனா். 10 பேர் படுகாயமடைந்துள்ளனா்.

நாடு முழுவதும் ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா இன்று கோலாகலமாகவும், உற்சாகமாகவும் தொடங்கியுள்ளது.

நவராத்திரி தொடங்கியதை அடுத்து கர்நாடகாவின் மைசூரில் புகழ்பெற்ற தசரா திருவிழாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தொடங்கிவைத்தார்.

அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கத் தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுநல மனுவை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவாக ரூ.81.47ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

பிரபல காலணி நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கேக் வடிவில் ரெஸ்யூம் அனுப்பியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்ட செயற்கை காலை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 4129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பிரதமா் நரேந்திர மோடி இன்று இரவு ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்