தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Twitter Vs Threads : ட்விட்டருக்கு போட்டியாக Threads .. மெட்டா நிறுவனம் அசத்தல் அறிவிப்பு - அதிர்ச்சியில் எலான் மஸ்க்!

Twitter Vs Threads : ட்விட்டருக்கு போட்டியாக Threads .. மெட்டா நிறுவனம் அசத்தல் அறிவிப்பு - அதிர்ச்சியில் எலான் மஸ்க்!

Divya Sekar HT Tamil
Jul 04, 2023 09:40 AM IST

ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் ‘Threads’ என்னும் செயலியை அறிமுகப்படுத்துகிறது.

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் ‘Threads’ சமூக வலைதளம்
மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் ‘Threads’ சமூக வலைதளம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் ‘Threads’ சமூக வலைதளம், ஜூலை 6ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் போல் இன்ஸ்டாகிராமிலும் எழுத்துக்களை போஸ்ட்டாக பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். அதற்குப் பிறகு ட்விட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதேசமயம் அதில் வேலை செய்து வந்த பல பணியாளர்களை நீக்கம் செய்தார்.

மேலும் ப்ளூடிக் வசதிக்குக் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டது. குறிப்பாக ஜூலை ஒன்றாம் தேதி அதாவது நேற்று உலகம் முழுவதும் ட்விட்டர் திடீரென முடங்கியது. இதனால் பல பயனர்கள் தகவல்களைப் பரிமாற முடியாமல் தவித்து வந்துள்ளனர். இது தொடர்பாகப் பல புகார்கள் அந்நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.

தற்போது இந்த சிக்கலைச் சரி செய்யும் நடவடிக்கையில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. பயனர்கள் கொடுத்த புகாருக்குப் பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க் இரு தினங்களுக்கு முன்பு தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அதன்படி, சரிபார்க்கப்பட்ட பயனர்களால் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளை மட்டும் படிக்க முடியும். சரிபார்க்கப்படாத பயனர்களால் ஒரு நாளைக்கு 600 பதிவுகளை மட்டும் தான் படிக்க முடியும். புதிய சரிபார்க்கப்படாத பயனர்களால் ஒரு நாளைக்கு 300 பதிவுகள் மட்டும் படிக்க முடியும் என தெரிவித்துள்ளார். அதன்பின் உச்ச வரம்பை உயர்த்தி, சரிபார்க்கப்பட்ட பயனர்கள் ஒரு நாளைக்குப் பத்தாயிரம் பதிவுகளைப் படிக்க முடியும்.

சரி பார்க்கப்படாத பயனர்களால் ஒரு நாளைக்கு ஆயிரம் பதிவுகளைப் படிக்க முடியும். புதிய சரிபார்க்கப்படாத பயனர்களால் ஒரு நாளைக்கு 500 பதிவுகளைப் படிக்க முடியும் எனத் தெரிவித்தார். மேலும் தேவையற்ற தகவல்களை அளிப்பதற்காகவே இது போன்ற தற்காலிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் தெரிவித்துள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்