தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Corona Cases: 60 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Corona Cases: 60 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Aarthi V HT Tamil
Apr 17, 2023 10:31 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

அதன் படி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 111 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,42,35,772 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,141 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 24 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,542 லிருந்து 60,313 ஆக உயர்ந்து உள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து உள்ளது. கேரளா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 19 ஆயிரத்து 848 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக ஏப்ரல் 14ஆம் தேதி 11,109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகமாக பதிவானது.

தமிழ்நாடில் நேற்று 5,988 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 514 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 36, 02, 215 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 366 பேர் கொரோனாக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ் நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்