தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Iit Jee Results 2023 : ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு முடிவுகள் வெளியானது! தெரிந்துகொள்வது எப்படி?

IIT JEE Results 2023 : ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு முடிவுகள் வெளியானது! தெரிந்துகொள்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Jun 18, 2023 12:37 PM IST

IIT JEE Results 2023 : ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு முடிவுகள் வெளியானது. வாவிலாலா சிட்விலாஸ் ரெட்டி என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தாண்டு நடைபெற்ற தேர்வுகளில் வாவிலாலா சிட்விலாஸ் ரெட்டி என்ற மாணவர் 360 மதிப்பெண்களுக்கு 341 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஹைதராபாத் மண்டலத்தைச் சேர்ந்தவர். பெண்களில் நயகந்தி நாக பவ்யஸ்ரீ என்ற மாணவி 298 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் 56 இடத்தை பிடித்துள்ளார்.

இந்தாண்டு 1,80,372 மாணவ, மாணவிகள் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் எழுதினர். இத்தேர்வுகள் தாள் 1, தாள் 2 என இரண்டு தாள்களாக நடத்தப்படும். தேர்வு எழுதியதில் மொத்தம் 1,39,727 மாணவர்கள் மற்றும் 40,645 பேர் மாணவிகள். ஜேஇஇ தேர்வு எழுதியவர்களில் 43,773 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 36,264 பேர் மாணவர்கள், 7,509 பேர் மாணவிகள். இந்தாண்டு ஹைதராபாத் மண்டலம் அதிக தேர்ச்சியை பெற்றுள்ளது.

வாவிலாலா சிட்விலாஸ் ரெட்டி

ரமேஷ் சூர்யா தேஜா

ரிஷி கர்லா

ராகவ் கோயல்

அடகட வெங்கட சிவராம்

பிரபவ் கந்தேல்வால்

பிகினா அபினவ் சவுத்ரி

மாலே கெடியா

நாகிரெட்டி பாலாஜி ரெட்டி

யாகன்டி பனி வெங்கட மணீந்தர் ரெட்டி ஆகிய மாணவர்கள் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் ஆவார்கள்.

இத்தேர்வுக்கான இறுதி ஆன்ச்ர் கீக்களும் வெளியிடப்பட்டுள்ளன. அத்தகவலையும் ஐஐடி குவஹாத்தியே பெற்றுள்ளது. எனவே மாணவர்கள், ஜேஇஇ இணையதளத்தை சரிபார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஹைதராபாத் மண்டலத்தில் இருந்து 10,432 தேர்வர்களும், ஐஐடி டெல்லி மண்டலத்தில் இருந்து 9,290 தேர்வர்களும், ஐஐடி பாம்பே மண்டலத்தில் இருந்து 7,957 தேர்வர்களும், ஐஐடி கரக்ப்பூர் மண்டலத்தில் இருந்து 4,618 தேர்வர்களும், ஐஐடி கான்பூர் மண்டலத்தில் இருந்து 4,582 தேர்வர்களும், ஐஐடி குவஹாத்தியில் இருந்து 4,499 தேர்வர்களும், ஐஐடி குவாஹாத்தி மண்டலத்தில் இருந்த 2,395 தேர்வர்களும் தேர்வாகியுள்ளனர். இரண்டாவது இடத்தில் ரூர்கி மற்றும் டெல்லி மண்டலங்கள் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்