தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Explainer : அறிவியல் ஆர்வமுள்ள மாணவரா? பிளஸ் 2 தேறியவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ‘She’ குறித்து தெரியுமா?

HT Explainer : அறிவியல் ஆர்வமுள்ள மாணவரா? பிளஸ் 2 தேறியவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ‘SHE’ குறித்து தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Jul 04, 2023 01:47 PM IST

Scholarship for Higher Education : சிபிஎஸ்சி, ஐசிஸ்சி உள்ளிட்ட மற்ற தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தாலும் அந்தப்பாடத்திட்டத்தில் முதல் 1 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களும் இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கு மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திறமைமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களாகவும் இருக்க வேண்டும் என்பன இந்த உதவித்தொகை பெறுவதற்கான நிபந்தனைகள்.

இந்தத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் ஒவ்வொருவருக்குக்கும் ரூ.80 ஆயிரம் ஒரு முழு ஆண்டுக்கு வழங்கப்படுகிறது. இதில் ரூ.5,000த்தை மாதாமாதமும், ரூ.20 ஆயிரத்தை கோடைக்கால பயிற்சிகளுக்காக மொத்தமாகவும் வழங்கப்படுகிறது. இளநிலை, முதுநிலை என 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக இந்த கல்வி உதவித்தொகையை மாணவர்கள் பெற முடியும்.

இந்த உதவித்தொகை பெறுவதற்காக தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கட்டாயம் வேண்டும்.

இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் 1 சதவீத மதிப்பெண்களை பெற்ற மாணவர்களாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் இந்தாண்டு 5.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அறிவியல் பிரிவில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள எந்தவொரு மாநில அல்லது மத்திய கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு தேர்வில் முதல் 1 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

சிபிஎஸ்சி, ஐசிஸ்சி உள்ளிட்ட மற்ற தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தாலும் அந்தப்பாடத்திட்டத்தில் முதல் 1 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களும் இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இந்தாண்டு 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஜேஇஇ மற்றும் ஏஐபிஎம்டி நுழைவுத்தேர்வில் தரவரிசையில் முதல் 10 ஆயிரம் இடத்தை பிடித்திருக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

கேவிபிஒய், ஜேபிஎன்எஸ்டிஎஸ் போன்ற திட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் தேசிய திறனறிவுத் தேர்வு மற்றும் சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

இவையனைத்தும் அடிப்படை தகுதிகள். எனினும் இதில் ஏதேனும் ஒரு தகுதியுடன் மாணவர்கள் மேற்படிப்புக்கு அறிவியல் துறையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமான ஒன்றாகும்.

பி.எஸ்சி, பி.எஸ்சி-எம்.எஸ்சி ஒருங்கிணைந்த படிப்பு, அல்லது பி.எஸ், எம்.எஸ் அறிவியல் புலத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், புள்ளியியல், புவியியல், வானியல், வானியற்பியல், மின்னணுவியல், தாவரவியல், விலங்கியல், உயிர் வேதியியல், மானுடவியல், நுண்ணுரியியல், புவி இயற்பியல், புவி வேதியியல், வளிமண்டலவியல், கடல் அறிவியல் போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றை இளநிலையில் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்.

கல்லூரி முதல்வர், கல்வி நிறுவன இயக்குனர், பல்கலைக்கழக பதிவாளர் வழங்கும் பரிந்துரை சான்றிதழ்

12ம் வகுப்பில் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணுக்கான தரவரிசை சான்றிதழை உங்கள் தேர்வு வாரியம் கொடுக்கும் பட்சத்தில் அதையும் இணைக்க வேண்டும். (கட்டாயமல்ல)

ஆண்டுதோறும் இந்த கல்வித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான காலம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெறும்.

இந்த ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலத்தில் https://www.online-inspire.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

எனவே இந்தாண்டுக்கான பதிவு விரைவில் துவங்கவுள்ள நிலையில் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணபித்து பயன்பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்