தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Funny Law 5 Years Prison For The Husband Who Forgets Wife Birthday

Funny Law: என்னது… மனைவியின் பிறந்தநாளை மறந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

Priyadarshini R HT Tamil
Feb 13, 2023 12:14 PM IST

சமோவா என்ற தீவு நாட்டில் மனைவியின் பிறந்தநாளை மறந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கூட விதிக்கலாம் என்ற வினோதமான சட்டம் உள்ளது. உலகின் பல நாடுகளில் பல்வேறு விசித்திரமான சட்டங்கள் உள்ளன. அதன்படி இந்த நாட்டில் மனைவியின் பிறந்தநாளை மறக்கும் கணவருக்கு இந்த சட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால், மனைவிகள் அவ்வாறு இருக்க மாட்டார்கள். அவர்கள் கணவரின் பிறந்தநாள், அவர்கள் திருமண நாள், குழந்தைகள் பிறந்த நாள், குடும்பத்தினரின் முக்கியமான நாட்கள் என அனைத்தும் நினைவில் வைத்து, அவர்களுக்கு வாழ்த்து கூறுவது, பரிசு கொடுப்பது, அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுப்பது என அவர்களை சர்ப்ரைஸ் செய்து அசத்திவிடுவார்கள்.

இதற்காகத்தான் சமோவா என்ற தீவு நாட்டில் இப்படி ஒரு சட்டம் பின்பற்றப்படுகிறது. உலகின் அழகான தீவு நாடுகளுள் ஒன்று சமோவா ஆகும். இங்கு கடைபிடிக்கப்படும் விசித்திரமான சட்டங்களினால், அடிக்கடி இந்த நாடு செய்திகளில் இடம்பெறுகிறது. மேலும் அங்கு சட்டங்கள் கடுமையாகவும் பின்பற்றப்படுமாம். அந்த வகையில் கணவன் தற்செயலான தனது மனைவியின் பிறந்தநாளை மறந்துவிட்டால் அது பெரிய குற்றமாக இந்த நாட்டில் கருதப்படுகிறது.

ஒருமுறை கணவர், தனது மனைவியின் பிறந்த நாளை மறந்துவிட்டால் அவருக்கு முதல் முறை மன்னிப்பு வழங்கப்படுகிறது. இரண்டாவது முறையும் அவர் மறந்துவிட்டால், அவருக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும். ஒருவேளை அதுகுறித்து மனைவி போலீசில் புகார் கொடுத்தால், கணவருக்கு 5 ஆண்டுகள் வரை கூட சிறை தண்டனை விதிக்கப்படும். சமோவாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற விசித்திரமான சட்டங்கள் உள்ளன. பல்வேறு நூதன சட்டங்களுக்கு பெயர்போன வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிந்து வெளியே செல்வது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. அரச குடும்பத்தினரின் நினைவு நாட்களின்போது, மக்கள் சிரிக்கவும், வெளியே செல்லவும், மது அருந்தவவும் தடை விதிக்கப்படும். 

கிழக்கு ஆப்ரிக்காவில் ஜாகிங் செல்ல முடியாது. ஏனெனில் அது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. ஓக்லஹோமா நாட்டில் ஒரு நாயை பார்த்து முகம் சுளித்தால், சிறை தண்டனை வழங்கப்படும். ஜெர்மனியில் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டால் அது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. 

இந்தியாவிலும் பெரும்பாலான கணவர்கள் மனைவியின் பிறந்தநாளை மறந்துவிடுகிறார்கள். எனவே அவர்களை சமோவா தீவுக்கு அனுப்பி தண்டனை பெற்றுத்தரலாம் என்று இந்திய பெண்கள் கருதுகிறார்கள்.       

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்