தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Up Cm Yogi Adithyanath : பிரதமரை தொடர்ந்து உபி முதல்வர் யோகிக்கும் கொலை மிரட்டல்

UP CM Yogi Adithyanath : பிரதமரை தொடர்ந்து உபி முதல்வர் யோகிக்கும் கொலை மிரட்டல்

Priyadarshini R HT Tamil
Apr 25, 2023 11:18 AM IST

UP CM Yogi Adiyanath : இந்த கொலை மிரட்டலை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சுஷாந்த் கால்ஃப் சிட்டி காவல் நிலையத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

112 என்ற பொது தொலைபேசி எண்ணிற்கு இந்த மிரட்டல் கால் வந்தது. இந்த எண் உத்ரபிரதேச அரசின் அவசர சேவைகளுக்கான எண்ணாகும். அந்த அழைப்பில் பேசிய நபர் நான் விரைவில் யோகியை கொல்வேன் என்று கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

இந்த போனை எடுத்துப்பேசிய 112 ஆபரேஷன் கமாணடர், சுஷாந்த் கோலஃப் நகர காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்தார். இதையடுத்து இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 506,507 மற்றும் ஐடி சட்டம் 66 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

506, 507 மற்றும் ஐடி66 ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளில் சுஷாந்த் கால்ஃப் காவல் நிலையத்தில் அடையாளர் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டயல் 112க்கு அழைப்பு வந்தவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றொரு சம்மந்தம் இல்லாத நிகழ்வில், ஏப்ரல் 24ம் தேதி பிரதமரின் கொச்சி பயணத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தப்படும் என்று மோடிக்கு கடிதம் எழுதிய நபரும் கைது செய்யப்பட்டார். சேவியர் என்பவர் அந்தக்கடிதத்தை எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் குறித்த கடிதம் தனக்கு கடந்த வாரம் வந்ததாக சனிக்கிழமை தெரிவித்தார்.

ஏஎன்ஐயிடம் பேசிய நகர போலீஸ் கமிஷ்னர் கே. சேதுராமன், “பிரதமருக்கு அச்சுறுத்தல் கடிதம் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டார். அவர் சேவியர் என்பவர் ஆவார். அவர் நேற்று கைது செய்யப்ட்டார். அவருக்கு தெரிந்த பிடிக்காத ஒருவரை மாட்டிவிடுவதாற்காக அவர் அவ்வாறு செய்ததாக தெரிவித்தார். இதை நாங்கள் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கண்டுபிடித்தோம் என்றார்.

எனவே பிரதமரின் கொச்சின் வருகைக்காக கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2,060 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக டிராபிக்கும் 2 மணிக்குப்பின்னர் கட்டுப்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்