தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka Elections : ‘மசால் தோசை வித் ராகுல்’ அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் - தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்

Karnataka Elections : ‘மசால் தோசை வித் ராகுல்’ அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் - தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்

Priyadarshini R HT Tamil
May 08, 2023 01:27 PM IST

Karnataka Assembly Elections 2023 : கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டெலிவரி பாட்னர்கள் தற்காலிக கான்ட்ராக்ட் பணியாளர்களுடன் ராகுல்காந்தி மசால் தோசை சாப்பிட்டு, காபி குடித்தார்.

பெங்களூரு தேர்தல் பிரச்சாரத்தில் சூடான மசால் தோசையை டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிட்ட ராகுல்
பெங்களூரு தேர்தல் பிரச்சாரத்தில் சூடான மசால் தோசையை டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிட்ட ராகுல்

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 10ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்றுடன் பிரச்சாரங்கள் நிறைவடைகின்றன.

பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக ராகுல் காந்தி உணவு டெலிவரி செய்யும் பார்ட்னர்களுடன் மசால் தோசை சாப்பிட்டுக்கொண்டே கேலந்துரையாடினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பெங்களூர் நகரில் ஒரு உணவு விடுதியில் அவர்களுக்காக மசால் தோசையும், காபியும் ஆர்டர் செய்தார்.

வேலையில்லாத் திண்டாட்டம் அவர்களை தற்காலிக கான்ட்ராக்ட் வேலைகளில் ஈடுபட வைப்பதாக குற்றம் சாட்டினர். இந்த வேலையை குறைவான கூலிக்குத்தான் அவர்கள் செய்கிறார்கள். அவர்களுடன் ராகுல் காந்தி சில விளையாட்டுகள் குறித்தும் பேசினார்.

 

அவர்களுக்கு பிடித்த கால் பந்து வீரர்கள் குறித்தும் கேட்டறிந்தார். ஸ்விகி, சோமேட்டோ. பிலின்கிட், டன்சோ போன்ற உணவு டெலிவரி பார்ட்னர்களுடன் உணவு உண்டார். பெங்களூரில் மட்டும் இதுபோன்ற முறைசாரா தொழிலாளர்கள் 2 லட்சத்துக்கும் மேல் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.

ராகுல் காந்தி முறைசாரா தொழிலாளர்களுடன் அவர் பேசியது குறித்து டிவிட்டில் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள ஏர்லைன்ஸ் ஓட்டல் அவர் ஸ்விகி, சோமேட்டோ உள்ளிட்ட டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களுடன் சேர்ந்து கலந்துரையாடினார் என்று குறிப்பிட்டார்.

மசால் தோசையும், காபியும் சாப்பிட்டுக்கொண்டே அவர்கள் டெலிவரி பார்ட்னர்கள் வாழ்க்கை குறித்தும், நிலையான வேலையின்மை மற்றும் கடுமையான விலை உயர்வு ஆகியவை குறித்தும் பேசினார். அவர்கள் ஏன் இந்த தொழிலை தேர்ந்தெடுத்தார்கள் மற்றும் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து நன்றாக கேட்டறிந்துகொண்டார்.

பின்னர் அவர் ஒரு பைக்கில் பின்னால் அமர்ந்து பயணம் செய்து, பெங்களூரில் தான் தங்கியிருக்கும் ஓட்டலை அடைந்தார்.

சிறுபான்மையினர், விளிம்பு நிலை மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் ராகுல் காந்தியின் பிரச்சார பயணத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ராகுல் காந்தியில் சாலை பேரணி மற்றும் கூட்டங்கள் இதுபோன்ற இடங்களில் செய்யப்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

கர்நாடகாவில் புதன்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

IPL_Entry_Point

டாபிக்ஸ்