தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fake Instagram Account: அட கவர்னர் பெயரிலுமா? நல்ல முன்னேற்றம்தான் போங்க!

Fake Instagram Account: அட கவர்னர் பெயரிலுமா? நல்ல முன்னேற்றம்தான் போங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 31, 2023 12:53 PM IST

இமாச்சல் பிரதேச கவர்னர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு மோசடி

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பலவற்றில் தங்கள் கணக்குகளை தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் என பலரையும் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் பல்வேறு பிரபலங்கள் பெயரில் போலியாக கணக்கை தொடங்கி அவர்களது நண்பர்கள் வட்டாரங்களில் பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. நாட்டின் பிற பகுதிகளை போல இமாச்சல் பிரதேசத்திலும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருன்றன. கடந்த் 5 ஆண்டுகளில் மட்டும் இமாச்சல் பிரதேசத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் பதிவாகி உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டவரை பண மோசடி வழக்குகள்தான்.

கடந்த ஆண்டு, முதல்வர், தலைமைச் செயலாளர் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கிய சைபர் குற்றவாளிகள், அவசர மருத்துவ சிகிச்சைக்காக பணம் வேண்டும் என்று கேட்டு பெற்றனர். இந்நிலையில் இமாசலபிரதேச கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கணக்கிலிருந்து பொதுமக்களிடம் பணமும் கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவர்னர் அர்லேக்கர் நேற்று, தனது பெயரில் பணம் கேட்கப்பட்டால் யாரும் கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், குறிப்பிட்ட போலி இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கும்படி அந்நிறுவன அதிகாரிகளை இமாசலபிரதேச போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து கவர்னர் பெயரில் தொடங்கப்பட்ட போலி இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவர்னர் ராஜேந்திர விஸ்வாஸ் கூறுகையில், "போலி கணக்கு துவங்கி குற்றச் செயலில் ஈடுபட்டும் அடையாளம் தெரியாத நபர்கள் அடுத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால் பொது மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்" என்றனர்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்