தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Election Commission Announces Dates For Karnataka Assembly Elections And Wayanad Lok Sabha Constituency By-elections Today

இன்று வெளியாகிறது கர்நாடக தேர்தல் தேதி! வயநாடு தேர்தல் தேதியும் வெளியாகிறது

Kathiravan V HT Tamil
Mar 29, 2023 09:56 AM IST

Karnataka Assembly Election: பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே அங்கு ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கணிப்புகள் வெளியாகி உள்ளது

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
ராகுல் காந்தி - நரேந்திர மோடி

ட்ரெண்டிங் செய்திகள்

மோடி குறித்து பேசிய அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் மக்களவை செயலகத்தால் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் நேரடியாக பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவில் மே மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே அங்கு ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி முடுக்கிவிட்டுள்ளது.

படித்த இளைஞர்களை கவரும் வண்ணம் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகையும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் உதவித்தொகையும் வழங்கும் யுவநிதி திட்டமும்,

குடும்ப தலைவிகளின் ஆதரவை பெறும் நோக்கில் 'க்ருஹ லக்ஷ்மி' என்ற திட்டத்தின் படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் நிதி உதவி திட்டத்தையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

'க்ருஹ ஜோதி' என்ற திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் ‘அன்ன பாக்யா’ என்ற திட்டத்தில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வெளியாகும் தேர்தல் தேதி தேர்தல் கர்நாடக களத்தை மேலும் சூடாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்