தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Earthquake Early Morning Today At Sikkim

சிக்கிமின் யுக்சமில் ரிக்டர் அளவுகோலில் 4.3 அளவு நிலநடுக்கம்

Priyadarshini R HT Tamil
Feb 13, 2023 11:35 AM IST

Sikkim Earthquake: சிக்கிமின் யுக்சமில் ரிக்டர் அளவுகோலில் 4.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 4.15 மணிக்கு ஏற்பட்டது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலநடுக்கம் அதிகாலை 4.15 மணிக்கு ஏற்பட்டது. 

நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 70 கிலோ மீட்டர் வடமேற்கு யுக்சம் நகரில் ஏற்பட்டது.  

சிக்கிமின் யுக்சமில் ரிக்டர் அளவுகோலில் 4.3 அளவு நிலநடுக்கம் இன்று அதிகாலையில் ஏற்பட்டதாக தேசிய நில நடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் அதிகாவை 4.15 மணியளவில் ஏற்பட்டது. வடமேற்கு  யுக்சம்நகரிலிருந்து 70 கிலோ மீட்டரில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கப்ம ஏற்பட்டது.   

அண்மையில் துருக்கி மற்றும் சிரியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு  பல்லாயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டடனர். அங்கு மீட்பு பணிகள் பணி தற்போது வரை நடைபெற்றுவருகிறது. பல்வேறு நாடுகளின் மீட்புப்படையினரும் அங்கு மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

இதற்கிடையே இன்று அதிகாலையில் சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியிருந்தது. இதற்கிடையே டச்சு புவியியலாளர் பிராங்க் ஹீகர் பீட்ஸ் என்பவர் இந்தியாவிலும் விரைவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று அவர் கணித்திருந்தார். 

அந்த நிலநடுக்கம் மிக சக்தி வாய்ந்ததாகவும், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கும் என்றும், அந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் துவங்கி, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் வழியாக இந்தியப்பெருங்கடலில் முடிவடையும் என்று கூறியிருந்தார். 

மேலும் அவர் துருக்கி - சிரியா நிலநடுக்கம் குறித்தும், அந்த நிலநடுக்கம் ஏற்படும் மூன்று நாட்களுக்கு முன்னதாக கணித்திருந்தார். அதுகுறித்த அந்த அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் தான் அங்கு சேதங்கள் கடுமையாக இருந்தன. 

எனவே நில நடுக்கங்களை நாம் தடுக்க முடியாது. அதனால், அதில் ஏற்படும் சேதங்களை தடுப்பதற்கு நிலநடுக்கத்தை தாங்கி வளரக்கூடிய கட்டிடங்களை கட்டவேண்டும். அதற்கான கட்டுமான செலவுகள் அதிகம் என்றபோதும், பாதுகாப்பு கருதி அவற்றை கட்ட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தர். 

இந்நிலையில் சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.        

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்