தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Diana: பிரிட்டன் இளவரசி டயானாவின் கண்கவர் கவுன் இத்தனை கோடிக்கு ஏலமா!

Diana: பிரிட்டன் இளவரசி டயானாவின் கண்கவர் கவுன் இத்தனை கோடிக்கு ஏலமா!

Manigandan K T HT Tamil
Jan 29, 2023 12:03 PM IST

பிரபல ஏல நிறுவனமான Sotheby's நடத்திய ஏலத்தில் ஆரம்ப விலையை விட 5 மடங்கு அதிகமாக விற்பனையானது; இதுவரை ஏலம் விடப்பட்ட இளவரசி டயானாவின் ஆடைகளில் இதுதான் விலை உயர்ந்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட இளவரசி டயானாவின் கவுன்
ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட இளவரசி டயானாவின் கவுன் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

வேல்ஸ் இளவரசி 1991 இல் அதிகாரப்பூர்வ அரச குடும்ப புகைப்படத்திலும், 1997 இல் ஒரு போட்டோஷூட்டிலும் இந்த ஆடையை அணிந்திருந்தார்.

ஏல மையத்தின் இணையதளத்தில் கவுன் விலை $80,000 - $120,000 ஆக மதிப்பிடப்பட்டிருந்தது. கடந்த வெள்ளியன்று நடந்த ஏலத்தில் நான்கு ஏலதாரர்கள் கவுனுக்காக போட்டியிட்டனர். அதன் பிறகு அது $604,800க்கு விற்கப்பட்டது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

1989 ஆம் ஆண்டு இலையுதிர்கால சேகரிப்பின் ஒரு பகுதியாக இந்த ஆடையை பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் விக்டர் எடெல்ஸ்டீன் வடிவமைத்தார்.

உடையின் அசல் டிசைன் ஸ்கெட்ச்சை பார்க்கும்போது இது இளவரசி டயானாவுக்காக பிரத்யேகமாக செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

விக்டர் எடெல்ஸ்டீன் இளவரசி டயானாவின் நீண்டகால ஆடை வடிவமைப்பாளராக இருந்தார். அவர் 1982 முதல் 1993 வரை அவருக்காக ஆடைகளை உருவாக்கினார்.

ஊதா நிற ஆடை முதன்முதலில் 1997 இல் 24,150 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. அந்த ஆண்டு ஏலம் விட முடிவு செய்த 79 காக்டெய்ல் ஆடைகளில் இதுவும் ஒன்றாகும்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலத்தில் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த இளவரசி டயானாவின் கவுன்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலத்தில் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த இளவரசி டயானாவின் கவுன் (Getty Images via AFP)

சில விஷயங்களில் இந்த கவுன் 100 ஆண்டுகளுக்கு முன்பு அணிந்திருக்கும் கவுன்களைப் போலவே தெரிகிறது. மேலும் இந்த கவுனின் சில பதிப்புகள் இன்றும் அப்படியே உள்ளன. இந்த கவுனின் சில பதிப்புகள் இன்றும் அப்படியே உள்ளன என்று அவர் Sotheby-ன் சீனியர் துணைத் தலைவர் சிந்தியா ஹவுல்டன் தெரிவித்தார்.

இளவரசி டயானா, மன்னர் மூன்றாம் சார்லஸின் முதல் மனையாவார். வில்லியம், ஹாரியின் தாயார் தான் இந்த டயானா. கார் விபத்தில் 1997ஆம் ஆண்டில் இவர் உயிரிழந்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்