தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Air India Cockpit: காக்பிட்டில் தோழியை உபசரித்த விமானி : புலனாய்வு விசாரணைக்கு உத்தரவு!

Air India Cockpit: காக்பிட்டில் தோழியை உபசரித்த விமானி : புலனாய்வு விசாரணைக்கு உத்தரவு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Apr 21, 2023 10:54 AM IST

DGCA: "விமானியின் இந்த செயல் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை DGCA பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் செயல்" என்று கூறியுள்ளார்.

விமானத்தில் உள்ள காக்பிட் பகுதி
விமானத்தில் உள்ள காக்பிட் பகுதி

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து டிஜிசிஏ விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான உண்மைகளை புலனாய்வுக் குழு ஆய்வு செய்யும் என்று டிஜிசிஏ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 27 அன்று துபாயில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தின் விமானி ஒருவர், பெண் தோழிக்கு ‘காக்பிட்டில்’ விருந்தளித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

"விமானியின் இந்த செயல் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை DGCA பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் செயல்" என்று கூறியுள்ளார். 

முன்னதாக ஏப்ரல் 18 ஆம் தேதி, துபாயில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில், சந்தேகத்திற்கிடமாக கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முன்னுரிமை கோரப்பட்டது.

ஆனால், முன்னுரிமை மறுக்கப்பட்டு விமானம் வழக்கம்போல் தரையிறங்கியது. இந்த விமானம் புனேவில் இருந்து புறப்பட்டது. சந்தேகத்திற்கிடமான காற்றில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, விமானத்தின் பைலட் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க முன்னுரிமை கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்