தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Derek O Brien: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!

Derek O Brien: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!

Karthikeyan S HT Tamil
Aug 08, 2023 12:12 PM IST

மாநிலங்களவையில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., டெரிக் ஓ பிரையன் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

டெரிக் ஓ பிரையன்
டெரிக் ஓ பிரையன்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது. இன்றைய கூட்டத்தில் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரம் மற்றும் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை மாநிலங்களவை இன்று காலையில் மக்களவை கூடியது.

இந்நிலையில், மாநிலங்களவை நடவடிக்கையை சீர்குலைத்ததற்காகவும், அவைத் தலைவரின் உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரையனை சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் பியூஸ் கோயல் தீர்மானம் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை நடவடிக்கையை சீர்குலைத்ததற்காக டெரிக் ஓ பிரையனை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக அவைத் தலைவர் அறிவித்தார்.  

மேலும், டெல்லி சேவைகள் மசோதா மீதான விவாதத்தின் போது மாநிலங்களவை தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான ஜகதீப் தங்கர், விளம்பரம் பெறுவதற்காக டெரிக் ஓ பிரையன் சபையில் நாடகமாடுவதாக கூறினார்.  இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்