தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Court Employee Suspends For Using Paytm To Receive Tips From Advocates

court employee suspends: பேடிஎம் மூலம் டிப்ஸ் வசூலித்த நீதிமன்ற டவாலி சஸ்பெண்ட்!

Karthikeyan S HT Tamil
Dec 02, 2022 03:45 PM IST

அலகாபாத் : வழக்கறிஞர்களிடம் இருந்து பேடிஎம் மூலம் டிப்ஸ் பெற்ற நீதிபதியின் உதவியாளரை சஸ்பெண்ட் செய்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேடிஎம்  QR code மூலம் டிப்ஸ் வசூலித்த நீதிமன்ற டவாலி
பேடிஎம் QR code மூலம் டிப்ஸ் வசூலித்த நீதிமன்ற டவாலி

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல், இதனை முக்கிய பிரச்னையாக கருதி, உடனடியாக விசாரித்து நீதிமன்ற டவாலியை விசாரித்துத் தகுந்த தண்டனை வழங்கியுள்ளார். தற்போது நீதிபதியின் உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "29.11.2022 தேதியிட்ட நீதிபதி அஜித் சிங்கின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரித்ததில், நீதிமன்ற டவாலி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்ற உதவியாளர் ஸ்ரீ ராஜேந்திர குமார் என்பவர், ஆடையோடு சேர்த்து பேடிஎம் QR code மூலம் பணம் பெற்றதற்காக உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். சஸ்பெண்ட் காலத்தில் அவர் வேறு எந்த வேலை, வர்த்தகம் அல்லது தொழிலில் ஈடுபடவில்லை என்பதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழை அளித்தால் அவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

IPL_Entry_Point