தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Complaint That The Sniffer Dog Ate The Jail Officer Lunch

Sniffer Dog: என்ன கொடுமை இது - மோப்பநாய் மீது புகாரளித்த சிறை அலுவலர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 30, 2023 11:40 AM IST

Complaint on Sniffer Dog: தன்னுடைய சாப்பாட்டை காவல்துறை மோப்பநாய் சாப்பிட்டு விட்டதாகச் சிறை அலுவலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மோப்பநாய்
மோப்பநாய்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த சிறை அலுவலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சிறையிலிருந்து வந்த ஒருவர் உதவி கேட்டுள்ளார். அவருக்கு உதவி செய்வதற்காக அந்த அலுவலர் சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு வெளியே சென்று உள்ளார்.

திரும்பி வந்து அந்த சிறையை அலுவலர் சாப்பிடப் பார்த்த போது அருகில் இருந்த உணவு காளியாக இருந்தது. அந்த சாப்பாடு முழுமையாகச் சாப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த அலுவலர் தனது அறைக்கு வெளியே நின்ற காவல்துறை மோப்ப நாயைப் பார்த்தார். அதன் மீது அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனே அவர், தன் சாப்பிட வைத்திருந்த மதிய உணவு காவல் மோப்பநாய் தின்று விட்டதாகக் கூறி புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் சிறை அறையில் அலுவலரின் காலியான சாப்பாட்டுப் பாத்திரமும், புகார் அளிக்கப்பட்ட மோப்ப நாயின் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வேகமாகச் சுற்றி வருகிறது. தற்போது அந்த வீடியோவை பல தங்களது பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்